200R - எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரீம்!

ஃபர்ஸ்ட் லுக் - ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200Rராகுல் சிவகுரு

ரண்டு ஆண்டுகள்... கான்செப்ட் வடிவத்தில் இருந்து, தயாரிப்பு நிலைக்கு எக்ஸ்ட்ரீம் 200R பைக்கைக் கொண்டு வருவதற்கு, ஹீரோ மோட்டோகார்ப் எடுத்துக்கொண்ட காலம்.  இந்த இடைப்பட்ட காலத்தில், தான் ஏற்கெனவே விற்பனை செய்யும் பைக்குகளின் மேம்படுத்தப்பட்ட மாடல்களைக் (ஸ்ப்ளெண்டர் i-Smart, அச்சீவர், கிளாமர், சூப்பர் ஸ்ப்ளெண்டர்) களமிறக்கியதன் காரணமாக, இந்தியாவில் ஐம்பது சதவிகிதம் டூ-வீலர் சந்தையை இந்நிறுவனம் தன்வசம் வைத்திருக்கிறது. இப்படி தொடர்ச்சியாகக் கம்யூட்டர் பிரிவிலேயே தனது முழுக்கவனத்தையும் செலுத்தியதால், 150சிசி-க்கும் அதிகமான பைக் பிரிவில் இருந்து ஹீரோ விலகியே இருந்தது.

ஆனால், கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போ மற்றும் 2016 மிலன் மோட்டார் ஷோவில் (EICMA), நேக்கட் ஸ்ட்ரீட் வகையைச் சேர்ந்த எக்ஸ்ட்ரீம் 200S பைக்கை அறிமுகம் செய்தது. ஜெய்ப்பூரில் இருக்கும் ஹீரோவின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்தில் வடிவமைக்கப் பட்டிருக்கும் இந்த பைக்கை, தனது ‘புதிய ரோட்ஸ்டர் பைக்’ என்பதைக் குறிக்கும் விதமாக, ‘எக்ஸ்ட்ரீம் 200R’ எனப் பெயர் சூட்டியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்