பல்ஸர் வெச்சிருந்தா ரேஸர் ஆகலாம்!

ரேஸ் - பஜாஜ் ரேஸ்தமிழ், படங்கள்: செ.விவேகானந்தன்

ருஷா வருஷம் தீபாவளி, பொங்கல் மாதிரி பல்ஸருக்கும் ஒரு திருவிழா இருக்கிறது. பஜாஜ் நிறுவனம், பல்ஸர் இளைஞர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ‘ஃபெஸ்டிவல் ஆஃப் ஸ்பீடு’ எனும் ரேஸை நடத்துகிறது. பல்ஸரை வாங்கிவிட்டு, சாலையிலும் தெருக்களிலும் சும்மா ‘வ்வ்ர்ர்ரூம்’ என முறையற்றுப் பறக்கும் இளசுகளின் ரேஸ் பசியைத் தீர்க்கும் விதமான திருவிழா இது. ‘ஃபெஸ்டிவல் ஆஃப் ஸ்பீடு’-க்கு இது மூன்றாம் ஆண்டு. ரேஸ் என்றால், நிஜமாகவே ரேஸ் ட்ராக்கில் பைக் ஓட்டுவதா என்றால்... ஆமாம்! இது இருங்காட்டுக்கோட்டை போன்ற பெரிய ரேஸ் ட்ராக்குகளில் நடப்பதல்ல. வழக்கம்போல், சென்னை மெரினாவில் உள்ள கோ-கார்ட் ரேஸ் ட்ராக்கில்தான் இந்த ஆண்டுக்கான பல்ஸர் திருவிழா நடந்தது. கடந்த முறை RS200 பைக்குக்கான போட்டி. இந்த ஆண்டு பல்ஸர் NS200, பல்ஸர் 220 போன்ற பைக்குகள் மட்டும் ரேஸிங்கில் உறுமின.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick