டாடா H5X-ல் என்ன ஸ்பெஷல்?

ஃபர்ஸ்ட் லுக் - டாடா H5Xதமிழ்

டாடா வரலாற்றிலேயே முதன்முறையாக, JLR எனும் ‘ஜாகுவார் லேண்ட்ரோவர்’ கார்கள் உருவாக்கப்படும் பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட உள்ள முதல் எஸ்யூவி இது. நெக்ஸான் போன்ற கார்களை டிசைன் செய்து அப்ளாஸ் அள்ளிய பிரதாப் போஸ் டிசைன் டீமின் தலைமையில், ஓவர்டைம் பார்த்து உருவான காரான இது. ஜீப் காம்பஸுக்கோ, ஹூண்டாய் க்ரெட்டாவுக்கோ... ஏன் டாடா ஹெக்ஸாவுக்கோகூட காய்ச்சல் வரவைக்கும் டாடாவின் எஸ்யூவி - ஹேரியர் அல்லது H5X.

‘‘பம்பர் டிசைனில் இருந்து ஃபெண்டர், இன்டீரியர், வீல் ஆர்ச் வரை எல்லாமே புதுசாக டிசைன் செய்திருக்கிறோம்!’’ என்கிறார் டிசைன் டீமின் தலைவர் பிரதாப் போஸ். இந்த ஆட்டோ எக்ஸ்போவில் பரபரப்பை ஏற்படுத்திய H5X காரின் ஹெட்லைட்டும் கிரில்லும், சிரிக்கும் ஸ்மைலியைப் போலவே இருக்கிறது. பனி விளக்குகள், வில்லில் இருந்து புறப்படும் அம்புபோல கூர்மையான டிசைனில் இருக்கின்றன.

இந்த JLR பிளாட்ஃபார்ம் ஷேரிங்கில்தான் பெரிய விஷயம் இருக்்கிறது. ஆம், மற்ற டாடா கார்களைப் போல இல்லை இது. லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் கார் தயாரிக்கப்படும் பிளாட்ஃபார்ம் என்பதால் சும்மா இல்லை. கட்டுமானம், டெக்னிக்கல் விஷயங்கள் என டிஸ்கவரியின் பல அம்சங்களை H5X-ல் எதிர்பார்க்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick