கியா காம்பேக்ட் எஸ்யூவி - அசத்தல் டிசைன்... ஆச்சர்ய விலை

அடிக்கல் நாட்டு விழா - கியா-இந்தியாவேல்ஸ்

‘இந்த ஆட்டோ எக்ஸ்போவின் ஹைலைட்’ கியாவின் அரங்கம்தான் என்று உறுதியான நிலையில்தான் எக்ஸ்போ தொடங்கியது. கியா, உலக அளவில் எட்டாவது பெரிய கார் நிறுவனம். அமெரிக்கா தொடங்கி தென்கொரியா வரை, 14 நாடுகளில் கார்களைத் தயாரிக்கிறது; 180 நாடுகளில் ஆண்டுக்கு 27 லட்சம் கார்களை விற்பனை செய்கிறது. கியா, நம் நாட்டில் விற்பனையை ஆரம்பிக்க இருக்கும் நிலையில், தனது பிரபலமான கார்களை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைத்திருந்தது. அதனால், அரங்கத்தில் கூட்டம் அள்ளியது.

செராட்டோ செடான், ஸ்டோனிக் க்ராஸ்ஓவர், ஸ்டிங்கர் GT, Ceed ஹேட்ச்பேக் கார், சொரென்ட்டோ எஸ்யூவி மற்றும் ஸ்போர்ட்டேஜ் எஸ்யூவி என்று பலவிதமான செக்மென்ட்டுகளைச் சேர்ந்த கார்களையும் காட்சிப்படுத்தி, எக்ஸ்போவில் கியா தன் அரங்கத்தை அலங்கரித்திருந்தது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick