அன்பு வணக்கம்!

மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

25 நிமிட இடைவெளியில் ஒரு கார்/பைக் அறிமுகமான ஆட்டோ எக்ஸ்போவில் கலந்துகொண்டது, பத்து கோடி ரூபாய் மதிப்புள்ள ரோல்ஸ்ராய்ஸ் ஃபேன்ட்டம் காரில் ஈசிஆர் சாலையில் பயணம் செய்த அனுபவத்தைக் கொடுத்தது. தனது கார் விற்பனையை நம் நாட்டில் துவங்க இருக்கும் கியா மோட்டார்ஸ், அதற்கு அச்சாரமாகக் காட்சிப்படுத்திய SP கான்செப்ட், மாருதியின் புதிய ஸ்விஃப்ட், டொயோட்டாவின் யாரிஸ், ஹோண்டாவின் புதிய சிவிக், அமேஸ் மற்றும் CR-V, மஹிந்திராவின் ஸ்டிங்கர், டாடாவின் H5X, 45X என்று அணிவகுத்திருந்த கார்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் பார்த்தது பரவசமான அனுபவம். பிஎம்டபிள்யூ, டிவிஎஸ், ஹீரோ, ஹோண்டா, சுஸூகி என்று பைக் நிறுவனங்களும் விருந்து படைத்தன.

அந்த அனுபவத்தைச் சற்றும் குறைக்காமல், அதை அப்படியே உங்களுக்குக் கொடுத்திருப்பதால், இந்த இதழ் முழுவதுமே ஆட்டோ எக்ஸ்போ ஸ்பெஷல் ஆகிவிட்டது. எலெக்ட்ரிக் கார்களுக்கு நம் நாடு தயாராகிக்கொண்டிருக்கிறது என்பதால், முக்கியமான கார் தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்துமே இந்தத் தொலைநோக்குப் பயணத்துக்கான திட்டத்தை, இந்த எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியிருந்தன. அது பற்றியும் விரிவான கட்டுரையை இந்த இதழில் கொடுத்திருக்கிறோம்.

ஆட்டோ எக்ஸ்போவின்போது, சம்பந்தப்பட்ட வெற்றியாளர்களைச் சந்தித்து, மோட்டார் விகடன் விருதுகளை வாசகர்கள் சார்பாக நாம் வழங்கியது, மகிழ்ச்சியை மேலும் கூட்டியது.

அன்புடன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick