மோட்டார் நியூஸ்!

அப்-டு-டேட் செய்திகளுக்கு... motor.vikatan.com

சென்னையில் நடந்த ஜாலி சிம்போஸியம்!

கனவு நாயகன் அப்துல் கலாம் பயின்ற குரோம்பேட்டை அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி வளாகத்தில், ‘கார்ட்டே பிளான்சே' என்கிற மூன்று நாள் தொழில்நுட்பக் கருத்தரங்கு (Technical Symposium) கடந்த பிப்ரவரி 9-ல் நடந்தது. இதன் நோக்கம் - “XPLORE THE FREEDOM”. இந்தக் கருத்தரங்கில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் மாணவர்கள் கலந்துகொண்டார்கள். பள்ளிக் குழந்தைகளுக்கான போட்டிகளில், பல்வேறு பள்ளிகளில் இருந்து ஐந்நூறுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். தொழில்நுட்பப் போட்டிகள் மற்றும் தொழிற்பட்டறைகள் என நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. எம்.ஐ.டி மாணவர்களுக்கு திருப்தியோ திருப்தியாக முடிந்துவிட்டது சிம்போஸியம்.

இரா.வாஞ்சிநாதன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick