ஜெனிஃபர் தொட்டாலே டாப் ஸ்பீடுதான்!

பேட்டி - ரேஸ்தமிழ், படம்: ஜெ.வேங்கடராஜ்

ரு வருடத்தின் அருமை ஃபெயிலான மாணவனைக் கேட்டால் தெரியும்; ஒரு மாதத்தின் அருமை, மாதச் சம்பளக்காரர்களிடம் கேட்டால் தெரியும்; ஒரு நிமிடத்தின் அருமை, விளம்பரதாரர்களிடம் கேட்டால் தெரியும்; ஒரு விநாடியின் அருமை - விபத்தில் பாதிக்கப்பட்டவரைக் கேட்டால் தெரியும். ஒரு மைக்ரோ செகண்டின் அருமை, ரேஸர்களுக்கு மட்டும்தான் தெரியும்.

பதினாறே வயதான ஜெனிஃபர், சில மைக்ரோ செகண்ட் வித்தியாசத்தில் மலேசியாவில் நடந்த ஏசியன் கப் ஆஃப் டேலன்ட் ரேஸிங்கில் குவாலிஃபையிங் ரேஸில் இருந்து டிஸ்குவாலிஃபைடு ஆகிவிட்டது வருத்தம்தான். ஆனால், இதில் ஒரு பெருமை இருக்கிறது. மலேசியாவில் நடந்த அந்த ரேஸில், இந்தியா சார்பில் கலந்துகொண்ட ஒரே ஒரு கண்ணு; ஒரே ஒரு பொண்ணு ஜெனிஃபர்தான். அதாவது, ஆசியாவிலேயே இரண்டாவது பெண். ‘‘ரேஸ் டிராக்கும் பைக்கும் புதுசு... அதான் டைமிங் மிஸ் ஆயிடுச்சு!’’ என்று வருத்தத்தில் இருக்கும் ஜெனிஃபர், மோ.வி வாசகர்களுக்கு ஏற்கெனவே பரிச்சயமானவர்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick