கியர்பாக்ஸ்... வேகத்தின் பாஸ்!

ஏன்.. எதற்கு.. எப்படி? - கியர்பாக்ஸ்தமிழ்

ரு சைக்கிள் இருக்கிறது. பெடல் போட்டு சாதாரண சாலைகளில் ‘விறுவிறு’வெனச் செல்கிறீர்கள். அதுவே மலைச் சாலைகளிலோ, பாலங்களிலோ ஏறும்போது என்னாகும்? மூச்சு வாங்கும். காரணம், சைக்கிளுக்கு எக்ஸ்ட்ரா இழுவைத் திறன் (டார்க்) தேவைப்படும்.  இறக்கங்களுக்கும் சரி; ஏற்றங்களுக்கும் சரி - இதுதான் கியர் சிஸ்டம்; ஆனால், ஏற்றங்களில் ஆற்றலைக் கூட்ட வேண்டும். மாங்கு மாங்கென்று மிதித்தால்தான் வேலைக்கு ஆகும். அப்படியென்றால், தேவையான இடங்களில் பவரையும் டார்க்கையும் அதிகரிக்க ஒரு மெக்கானிக்கல் சிஸ்டம் இருந்தால் நல்லது. அதற்குப் பெயர்தான் கியர்பாக்ஸ்.

கியர்பாக்ஸா.. அப்படினா?

மெஷினில் ஒரு பாகத்தில் இருந்து இன்னொரு பாகத்துக்கு பவரைக் கடத்துவதுதான் கியர்பாக்ஸ். சைக்கிளில் பெடல்களை அழுத்தும்போது பவர் பின் சக்கரங்களுக்குச் செல்வதுபோல், கார்களில் கிராங்க்ஷாஃப்ட்டில் (இன்ஜினிலிருந்து பவரைப் பெறும் ஆக்ஸிலுக்குப் பெயர் க்ராங்க்ஷாஃப்ட்) இருந்து டிரைவ்ஷாஃப்ட் எனும் மெஷினுக்கு அனுப்பி, வீல்களைச் சுழல வைப்பதற்குத் தேவை கியர்பாக்ஸ். கிராங்க்ஷாஃப்ட்டுக்கும் டிரைவ் ஷாஃப்ட்டுக்கும் இடையில் அமைந்து பவரை அனுப்பும் வேலை கியர்பாக்ஸினுடையது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick