ஆக்சஸரீஸ் - மல்ட்டி பாக்கெட் ஸ்டோரேஜ்

ஆக்சஸரீஸ் - கார்தமிழ்

காரில் பயணிக்கும்போது பெரிய சிக்கலே, பொருள்கள் வைக்க இடமில்லாமல் தவிப்பதுதான். நான்கு மீட்டருக்கு மேற்பட்ட பெரிய எஸ்யூவியாக இருக்கும்; ஆனால், காருக்குள்ளே தண்ணீர் பாட்டில் வைக்கக்கூட இட நெருக்கடியாக இருக்கும். அதிலும் பின் பக்கப் பயணிகளுக்கு ஸ்டோரேஜ் இடவசதிதான் சிம்ம சொப்பனம். ஹாயாக உட்கார்ந்து பேப்பர் படித்தபடியோ, ஃபைல்கள் பார்த்தபடியோ, லேப்டாப் ஆபரேட் செய்தபடியோ வருவது, பெரிய லக்ஸூரி கார்களுக்கு மட்டும்தான் பொருந்தும். சாதாரண மிட் சைஸ் கார்களில் பேப்பர், லேப்டாப், பாட்டில் வைக்கப் பெரிதாக இடம் இருக்காது. அதனால், சாதாரண கார்களுக்கு வரப்பிரசாதமாக வந்திருக்கிறது இந்த ஆக்சஸரீ.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick