எது பெஸ்ட் ஸ்கூட்டர்?

ஒப்பீடு / ஹோண்டா கிராஸியா VS டிவிஎஸ் என்டார்க் VS ஏப்ரிலியா SR125 தொகுப்பு: ராகுல் சிவகுரு

ஸ்கூட்டர் இப்போது ஸ்மார்ட் போன் போல ஆகிவிட்டது. ஆம், ஸ்கூட்டரில் பல வசதிகளை வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கத் துவங்கிவிட்டனர். 125சிசி ஸ்கூட்டர் செக்மென்ட், தற்போது அந்த பாதையை நோக்கித்தான் சென்றுகொண்டிருக்கிறது. இங்கே உள்ள பளிச் ஸ்கூட்டர்கள் அனைத்துமே அதற்கான உதாரணம்தான். இவற்றில் எது இளசுகளின் சாய்ஸ்?

டிசைன்

 இங்கிருப்பதில், புதிய ஸ்கூட்டரான டிவிஎஸ் என்டார்க் 125தான், டிசைனில் அதிக லைக்குகளை வாங்குகிறது. இதன் முன்பக்க டிசைன் பல ஸ்கூட்டர்களை நினைவுப்படுத்தினாலும், பின்பக்க டிசைன் அதிரடியாக இருக்கிறது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ஏப்ரிலியா போன்று ஸ்போர்ட்டி டிசைனாக இல்லாவிட்டாலும், கவர்ச்சியாக இருக்கிறது என்டார்க் 125. ஆனால், Gloss, மேட், கார்பன் ஃபைபர் என ஒவ்வொரு இடத்திலும் ஒருவித ஃப்னிஷ் இருப்பது, சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். ஃபுட் பெக்ஸ், டிஜிட்டல் மீட்டர், சீட் ஆகியவற்றை வைத்தே, என்டார்க் 125 ஸ்கூட்டரின் ஃபிட் அண்டு ஃபினிஷைத் தெரிந்துகொள்ளலாம்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick