தீபாவளி சரவெடி... புது எர்டிகா ரெடி!

மாற்றம் / மாருதி எர்டிகாதொகுப்பு: தமிழ்

மாருதி பிரியர்கள் தயாராக இருங்கள்; எர்டிகா மூலம் எகிறியடிக்கக் காத்திருக்கிறது மாருதி. அண்மையில் நடந்த இந்தோனேஷியா மோட்டார் ஷோவில் செம ஸ்டைலான எர்டிகாவைக் காட்சிக்கு வைத்துப் பரவசப்படுத்திவிட்டது மாருதி. சட்டெனப் பார்க்கும்போது எர்டிகாவா இது என்று நம்ப முடியவில்லை. நமக்குக் கிடைத்த தகவல்களின்படி எர்டிகா இப்படித்தான் இருக்கும். முன்பைவிட கொஞ்சம் பெரிதாக வளர்ந்திருக்கிறது எர்டிகா. ஃப்ரெஷ் லுக்கில், ஸ்டைலிஷான அலாயோடு அசத்துகிறது. பழசைவிட மூக்குக் கொஞ்சம் அகலமாக இருக்கிறது. கிரில்கள் சாதாரண, நீளமான டிசைன்தான்; ஆனால் ஸ்போர்ட்டி! தூரத்தில் இருந்து முன் பக்கத்தைப் பார்த்தால், சட்டென இனோவா போல் தெரிகிறது. ஹெட்லைட்டுகளுக்கு குரோம் ஃபினிஷிங் ஸ்டைலிஷ். இது பென்ஸ் ‘A’ கிளாஸை நினைவுப்படுத்தியது. கீழே பனி விளக்குகளைத் தனியாக ‘C’ வடிவ பிராக்கெட்டில் கொடுத்தது நச் ஐடியா. இது ஃபார்முலா கார் விங்குகளை நினைவுப்படுத்தியது. முன் பக்கம் பென்ஸ் என்றால், பின் பக்கம் டெய்ல் லைட்டுகள் வால்வோ XC-60 காரை நினைவுப்படுத்தின. வால்வோவில் டெயில் லைட்டுகளை இப்படித்தான் உயர்த்தி டிசைன் செய்திருப்பார்கள். ‘D’ பில்லரும் இனோவாவை நினைவுபடுத்துகிறது. காரின் பக்கவாட்டில் ஷார்ப்பான கோடுகள் எடுப்பாக இருக்கின்றன. மொத்தத்தில் டிசைனில் பல கார்களின் கலவைகளில் கலந்துகட்டி அடிக்க வருகிறது எர்டிகா.

பழசைவிட நீளத்தில் 99 மிமீ-யும், அகலத்தில் 40 மிமீ-யும் கூடியிருக்கிறது புதிய எர்டிகா. நிச்சயம் கேபின் இடவசதி தாராளமாக இருக்கும். ஆனால், வீல்பேஸ் அதே 2,740 மிமீதான். 3-வது வரிசை சீட்டுகளில் ஏதேனும் இடவசதி மாற்றம் இருந்தால் நல்லது. ஃப்யூல் டேங்க் அதே 45 லிட்டர். இந்தோனேஷியா காரில் 180 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் இருந்தது. ஆனால், விற்பனையில் இருக்கும் நம் எர்டிகாவின் கி.கி - 185 மிமீ.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்