C-க்ளாஸில் - சூப்பர் க்ளாஸ்! | First Drive mercedes benz c220d - Motor Vikatan | மோட்டார் விகடன்

C-க்ளாஸில் - சூப்பர் க்ளாஸ்!

ஃபர்ஸ்ட் டிரைவ் - மெர்சிடீஸ் பென்ஸ் C220d

னது C-க்ளாஸ் காரின் பேஸ்லிஃப்ட் மாடலைத் தடாலடியாகக் களமிறக்கியிருக்கிறது மெர்சிடீஸ் பென்ஸ். எதிர்பார்த்தபடியே சின்னச் சின்ன டிசைன் மாற்றங்கள் மற்றும் கூடுதலாக சில வசதிகள் இருந்தாலும், மிக முக்கிய மாற்றம் காரின் பானெட்டுக்குக் கீழே நிகழ்ந்திருக்கிறது. இதில் பொருத்தப்பட்டிருக்கும் 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின், BS-VI மாசு விதிகளுக்கு ஏற்பத் தயாரிக்கப்பட்டிருக்கிறது. விலை குறைவான C220d வேரியன்ட்டில் இதே இன்ஜின் 194bhp/40kgm வெளிப்படுத்தினால், விலை அதிகமான 300d வேரியன்ட்டில் இது வெளிப்படுத்துவதோ 245bhp/51kgn! எனவே, இந்தியாவில் அதிக வரவேற்பைப் பெறப்போகும் C220d பற்றி இங்கே பார்ப்போம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick