தாத்தாவுக்கும் பேரனுக்கும் போட்டி! | Comparison Lambretta Li150 vs Aprilia SR150 - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/10/2018)

தாத்தாவுக்கும் பேரனுக்கும் போட்டி!

ஒப்பீடு - லாம்ப்ரெட்டா Li150 VS ஏப்ரிலியா SR150

`ஜெமினி கணேசன் காலத்து லாம்ப்ரெட்டாவுக்கும், விஜய் தேவரகொண்டா காலத்து ஏப்ரிலியாவுக்கும் எதுக்கு கம்பேரிசன்?’ எனக் கேள்வி எழுந்திருக்கும். சில தாத்தா காலத்து பைக்குகள், பேரன்கள் காலம் வரைக்கும் டிசைன், ரைடு குவாலிட்டி, ஃபன் டூ டிரைவ், ஸ்டைல் என சில விஷயங்களில் கெத்து காட்டும். அழகுக்கும் ஆர்வத்துக்கும் பெயர்போன இத்தாலிய ஸ்கூட்டர்கள் அந்த வகையைச் சேர்ந்தவைதான். லாம்ப்ரெட்டா  Li 150 ஸ்கூட்டர், ஏப்ரிலியா SR 150 ஸ்கூட்டரை விட 56 வயசு பெருசு. ஊரே கண்ணு பட, இரண்டிலும் ஒரு ஜாலி ரைடு  அடித்தேன்.