ஹூண்டாய்க்கும் ஹோண்டாவுக்கும் ‘நோ’ சொல்லுமா பெலினோ! | Competition jazz vs i20 vs Baleno Automatic petrol - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/10/2018)

ஹூண்டாய்க்கும் ஹோண்டாவுக்கும் ‘நோ’ சொல்லுமா பெலினோ!

போட்டி - ஜாஸ் Vs i20 Vs பெலினோ (ஆட்டோமேட்டிக் பெட்ரோல்)

சில கிரிக்கெட் போட்டிகள், பார்க்கப் பார்க்கச் சலிக்காது. எத்தனை தடவை பார்த்தாலும், முதல்முறை பார்ப்பதுபோலவே இருக்கும். ஹூண்டாய்க்கும் மாருதி சுஸூகிக்கும் இடையே உள்ள போட்டியும் அப்படிப்பட்டதுதான். ‘மாருதி வாங்கினா நிம்மதியா இருக்கலாம்; ஹூண்டாய்தாங்க ஃபீச்சர்ஸ்ல பெஸ்ட்’ என்று எப்போதும் இரண்டுவித வாக்குவாதம் நடக்கும். இதில் ‘ஹோண்டா மதிப்பே தனி’ என எக்ஸ்ட்ராவாக இன்னொரு கருத்தும்  சேர்ந்தால் எப்படி இருக்கும்? ஹைப்பை ஏற்றாமல் விஷயத்துக்கு வருகிறேன். ஃபேஸ்லிஃப்ட் ஆன ஹூண்டாய் எலீட் i20-க்கும், செக்மென்ட் லீடரான மாருதி சுஸூகியின் பெலினோவுக்கும், புதுசாய் அப்டேட் ஆன ஹோண்டாவின் ஜாஸுக்கும்தான் இந்த இன்னிங்ஸில் கடுமையான போட்டி. மூன்றுமே கிளட்ச் இல்லாத CVT ஆட்டோமேட்டிக் கார்கள். மூன்று கார்களின் டிரைவர் சீட்டில் அமர்ந்தால், ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஏரியாவில் பட்டையைக் கிளப்பின. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close