சென்னை to கங்கண்ண சிரசு - கூகுள் மேப்பிலேயே இங்கு வழி கிடையாது! | Readers Great Escape - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/10/2018)

சென்னை to கங்கண்ண சிரசு - கூகுள் மேப்பிலேயே இங்கு வழி கிடையாது!

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - ஸ்கோடா ரேபிட் டீசல்

வீக் எண்டில் ஒருநாள் டூர் அடிக்க ஆசைப்பட்டு, சிலர் வீக்கான டூரிஸ்ட் ஸ்பாட்களுக்குச் சென்று மொக்கை வாங்குவார்கள். ஆனால், சென்னையில் இருந்து ஒருநாள் டூர் அடிக்க ஆப்ஷன்கள் ஏராளமாக இருக்கின்றன. பக்கத்தில் உள்ள ஆந்திர மாநிலம் சித்தூர், அப்படி ஒரு ஏரியாதான். ஏரிகளும் அருவிகளும் இங்கே வதவதவென இருக்கின்றன. ‘‘நான் கிரேட் எஸ்கேப் விசிறி. ரெண்டே நாள்தான் லீவ் அப்ளை பண்ணியிருக்கேன். ஸ்கோடா ரேபிட் வெச்சிருக்கேன். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்துல கங்கண்ண சிரசு அருவி பற்றி நெட்ல தேடிப் பாருங்க. பிடிச்சிருந்தா கங்கண்ண சிரசுனு டைப் பண்ணி தம்ஸ் - அப் ஸ்மைலி அனுப்புங்க. போலாம்!’ என்று இ-மெயில் அனுப்பியிருந்தார் ஜெயப்பிரகாஷ். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close