ஆக்சஸரீஸ் | Car and bike accessories - Motor Vikaatn | மோட்டார் விகடன்

ஆக்சஸரீஸ்

ஆக்சஸரீஸ் - கார்

வொய்டு ஆங்கிள் ரியர் கான்வெக்ஸ் லென்ஸ்

பயன்: பிளைண்ட் ஸ்பாட் ஏற்படாது.

சிலருக்குக் கண்ணாடி பார்க்கும் பழக்கமே இருக்காது - அதாவது, கார் ஓட்டும்போது! யூ டர்ன் அடிக்கும்போது, ஓவர்டேக் செய்யும்போது, ரிவர்ஸ் எடுக்கும்போது, டாப் ஸ்பீடில் பறக்கும்போது... எப்போதுமே ரியர்வியூ மிரர், சைடு மிரரில் ஒரு கண் வைத்துக்கொள்ள வேண்டும். அப்படியும் சிலர், க்ரீச் போட்டுவிடுவார்கள். காரணம், ரியர்வியூ மிரரில் ஏற்படும் பிளைண்ட் ஸ்பாட். இதைத் தவிர்ப்பதற்காகவே ஒரு கான்வெக்ஸ் லென்ஸ் உண்டு. சிறிதாக இருக்கும் குவி லென்ஸ் இது. `ஆப்ஜெக்ட்ஸ் இன் தி மிர்ரரை’ மிக அருகில் காட்டுவதுதான் இதன் வேலை. சாலையில் இருக்கும் சிறிய கல்கூட இதில் தெரியும் என்பதால், தன்னம்பிக்கையோடு காரைத் திருப்பலாம்; ஓவர்டேக் செய்யலாம். ஹைஸ்பீடில் போகும்போது, சில நேரம் மிக அருகில் இருக்கும் வாகனங்கள் ரியர்வியூ மிரரில், சைடு மிரரில் தெரிய வாய்ப்பில்லை. அந்தக் குறையை இது போக்கும். பெரும்பாலும், ஆஃப்ரோடு வாகனங்களில் இந்த வகை லென்ஸ்களின் பயன்பாடு அதிகம். வட்டவடிவமாக இருக்கும் இதை விங் மிரரிலேயே ஃபிட் செய்துகொள்ளலாம் என்பது இதன் ஸ்பெஷல். 350 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரை ஆஃப்டர் மார்க்கெட்டில் கிடைக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick