புது டொமினார் இவ்வளவு மாறியிருக்கா? | First drive report of Bajaj Dominar D400 - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/04/2019)

புது டொமினார் இவ்வளவு மாறியிருக்கா?

ஃபர்ஸ்ட் ரைடு ரிப்போர்ட் - பஜாஜ் டொமினார் D400

டொமினார் D400... 2014 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் CS400 கான்செப்ட்டாக அறிமுகமானது. 2016-ம் ஆண்டின் இறுதியில் அசத்தலான விலையில் களமிறங்கிய இந்த பவர் க்ரூஸர் பைக், இரவுநேர ஹைப்பர் ரைடிங்கை மனதில் வைத்துத் தயாரிக்கப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக விற்பனையில் இருக்கும் டொமினார் D400, எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. டியூக் 390 பைக்கின் இன்ஜின், LED லைட்டிங், டூயல் சேனல் ஏபிஎஸ், பெரிமீட்டர் ஃப்ரேம், ரேடியல் டயர்கள், ஃப்யூல் இன்ஜெக்‌ஷன், லிக்விட் கூலிங், ஸ்லிப்பர் க்ளட்ச் என ஒரு டூரர் பைக்குக்கான டெக்னிக்கல் விஷயங்களுடன் மிரட்டிய இந்த பைக், ஏனோ நிஜத்தில் அப்படி பொசிஷன் ஆகவில்லை. ப்ரீமியம் பைக்குகளுக்கான சந்தை விரிவடைவதைத் தொடர்ந்து, தேவையான முன்னேற்றங்களுடன் கூடிய டொமினார் D400 பைக்கைத் தயாரித்துள்ளது பஜாஜ். பைக் இன்னும் வெளிவரவில்லை என்பதால், விலை விபரங்கள் இப்போது இல்லை!

நீங்க எப்படி பீல் பண்றீங்க