அல்ட்ராஸ் - பெலினோ, i20, ஜாஸ் தொகுதியில் டாடாவின் ஹேட்ச்பேக் வேட்பாளர் | First look of Tata Altroz revealed at geneva motor show - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/04/2019)

அல்ட்ராஸ் - பெலினோ, i20, ஜாஸ் தொகுதியில் டாடாவின் ஹேட்ச்பேக் வேட்பாளர்

ஃபர்ஸ்ட் லுக் / டாடா அல்ட்ராஸ்

ஜெனிவா மோட்டார் ஷோவில், பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ப்ரீமியம் ஹேட்ச்பேக்கான அல்ட்ராஸைக் காட்சிப்படுத்தியது டாடா மோட்டார்ஸ். கடந்த ஆண்டு நடைபெற்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் 45X கான்செப்ட்டாக வெளிவந்த நிலையில், இப்போது பெலினோ - எலீட் i20 -  ஜாஸ் கார்களுக்குப் போட்டியாகக் களமிறங்கியிருக்கிறது அல்ட்ராஸ். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்த ப்ரீமியம் ஹேட்ச்பேக் விற்பனைக்கு வரலாம். கார் பார்க்கப் பெரிதாக தெரிந்தாலும் 3,988 மிமீ நீளம், 1,754 மிமீ அகலம், 1,505 மிமீ உயரம், 2,501 மிமீ வீல்பேஸ் என 4 மீட்டர் கார்களுக்கு உட்பட்ட அளவிலேயே இருக்கிறது டாடா அல்ட்ராஸ்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க