புது ஃபிகோ... என்னென்ன ஆச்சரியங்கள்? | First drive of Ford Figo facelift - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/04/2019)

புது ஃபிகோ... என்னென்ன ஆச்சரியங்கள்?

ஃபர்ஸ்ட் டிரைவ் ஃபோர்டு ஃபிகோ பேஸ்லிஃப்ட்

ரு காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் வரப்போகிறது என்றால், அதன் டெக்னிக்கல் விவரங்களைத் தாண்டி அது என்ன முன்னேற்றம் கண்டுள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளவே பலரும் ஆசைப்படுவோம். ஆனால், இங்கே நீங்கள் பார்க்கும் ஃபிகோ பேஸ்லிஃப்ட்டில் என்ன இருக்கும் என்பது, எல்லோருக்கும் கடந்த ஆண்டே தெரியும்! ஏனெனில், க்ராஸ் ஓவருக்கேற்ற பாடி பேனல்கள் மற்றும் உயர்த்தப்பட்ட சஸ்பென்ஷன் ஆகியவற்றுடன் வெளிவந்த ஃப்ரீஸ்டைல் காரில் இருந்த பெரும்பான்மையான அம்சங்களே, ஃபிகோ பேஸ்லிஃப்ட்டிலும் உள்ளன. இதனால் இந்த காரை முன்பே பார்த்ததுபோலத் தோன்றலாம். ஆனால், இதில் ஃபோர்டு சில ஆச்சர்யங்களை வைத்திருக்கிறது. அவை என்னென்ன?

நீங்க எப்படி பீல் பண்றீங்க