ஹைபிரிட் அதிசயம்! - ஃபர்ஸ்ட் ரைடு - டொயோட்டா கேம்ரி | First Drive - TOYOTA CAMRY - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/04/2019)

ஹைபிரிட் அதிசயம்! - ஃபர்ஸ்ட் ரைடு - டொயோட்டா கேம்ரி

ரவு 2 மணி... கிழக்குக் கடற்கரைச் சாலையில் பைக்  திடீரெனக் கோளாறாகி நின்றுவிட, அப்போது ஒரு சொகுசு காரில் லிஃப்ட் கிடைத்தால் எப்படி இருக்கும்... அதுவும், லிஃப்ட் கொடுப்பது நயன்தாரா என்றால்! `இதெல்லாம் கனவில்கூட நடக்காது!’ எனக் கலாய்க்காதீர்கள். 2.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்கொண்ட டொயோட்டா கேம்ரி, பெஸ்ட் மைலேஜ் கார்களான செலெரியோ, ஆல்ட்டோவைவிட அதிக மைலேஜ் கொடுக்கும்போது, சில கனவுகள் பலிப்பதில் ஆச்சர்யமில்லை. உலகளவில் ஹைபிரிட் தொழில்நுட்பம் பெருமளவு முன்னேறியிருப்பதற்கு, சமீபத்தில் விற்பனைக்கு வந்த கேம்ரி ஓர் உதாரணம். இன்னும் பிரபலமாகாத ஹைபிரிட் சந்தையில் களமிறங்கியிருக்கும் கேம்ரியின் வேக,விவேகத்தைப் பார்ப்போம்.