காருக்குள் கான்ஃபரன்ஸ்... இந்த பென்ஸில் சாத்தியம்! | First drive Mercedes Benz VS V class - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/04/2019)

காருக்குள் கான்ஃபரன்ஸ்... இந்த பென்ஸில் சாத்தியம்!

ஃபர்ஸ்ட் டிரைவ் மெர்சிடீஸ் பென்ஸ் V க்ளாஸ்

பென்ஸில் A, B, C, E, G, S என வெரைட் டியான க்ளாஸ்கள் உண்டு. ஹேட்ச்பேக்கில் ஆரம்பித்து செடான், எஸ்யூவி, கூபே என எல்லா மாடல்களிலும் கலந்துகட்டிக் கலக்குகிறது மெர்சிடீஸ் பென்ஸ். லேட்டஸ்ட்டாக `V’ க்ளாஸ் எனும் எம்பிவி-யையும் பென்ஸ் களமிறக்கிவிட்டது. இங்கே `V’ என்பது பென்ஸின் 'வியானோ' எனும் காரைக் குறிக்கலாம். காரணம், ப்ரென்ட் வீல் டிரைவான வியானோ எம்பிவியின் ப்ளாட்ஃபார்மில்தான் ரெடியாகி இருக்கிறது `V’ க்ளாஸ்.

பார்ப்பதற்கு மினி வேன்போல் இருந்தாலும், பென்ஸுக்கே உரிய அந்த லக்ஸூரித்தனம் பளிச்சிடுகிறது. இந்த எம்பிவி-யில் 7 பேர்தான் உட்காரலாம். வேன் என்றால் இன்னும் அதிகமானோர் பயணிக்கலாமோ என நினைத்தால்?

நீங்க எப்படி பீல் பண்றீங்க