ஒரு வாரத்தில் காலியாகுமா பேட்டரி சார்ஜ்? - சர்வீஸ் அனுபவம் - தொடர் - 4 | service experience - Battery Charge - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/04/2019)

ஒரு வாரத்தில் காலியாகுமா பேட்டரி சார்ஜ்? - சர்வீஸ் அனுபவம் - தொடர் - 4

விமல்நாத், ஓவியங்கள்: ராஜன்

ன்னைப் பொறுத்தவரை கூக்குரல்களுக்குப் பஞ்சமே இல்லாத இடம் - சர்வீஸ் சென்டர்களாகத்தான் இருக்கும். இன்னோர் இடம் ஒன்று இருக்கிறது - அது என் கனவு ஏரியா. ‘‘இன்ஜின் நாய்ஸ் சரி பண்ணவே இல்லை... ஆடியோ சிஸ்டம் அப்படியேதான் இருக்கு... கிளட்ச் ப்ளே மாத்துனேன்னு சொன்னீங்க... என்னதான் சர்வீஸ் பண்றீங்களோ?’’ - இப்படி என் கனவில்கூட சத்தங்கள் கேட்டுக் கொண்டேதான் இருக்கும் என்றால் நம்புவீர்களா?

அன்றைக்கும் அப்படித்தான். ‘‘பேட்டரி செக் பண்ணியாச்சுனுதான் ஒவ்வொரு தடவையும் சொல்றீங்க... பத்தே நாளுக்குள்ள எப்படிங்க சார்ஜ் டிரெய்ன் ஆகும்?’’ - இப்படி ஒரு சத்தம் கேட்டது. ஆனால் இது கனவில் இல்லை; நிஜமாகவே சர்வீஸ் சென்டரில் இப்படி ஒரு புகாரோடு வந்திருந்தார் அந்தப் பெரியவர்.

புகார் இதுதான். அதாவது அவர் பேட்டரி சரியில்லை என்பதால், புதிதாக ஒரு கார் பேட்டரியை ஃபிக்ஸ் செய்யச் சொன்னார். மாட்டிய ஒரு வாரத்திலேயே பேட்டரி சார்ஜ் காலியாகிவிட்டது என்று வந்தார். ஒரு பேட்டரியின் ஆயுள், குறைந்தது இரண்டரை ஆண்டுகள்.  ஒரே வாரத்தில் எப்படி பேட்டரியின் சார்ஜ் காலியாகி இருக்கும்? மண்டை குழம்பிவிட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க