ஸ்ட்ரீட் ரேஸ் எதுக்கு... மோட்டோக்ராஸ் இருக்கு! | You can also become a racer - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/04/2019)

ஸ்ட்ரீட் ரேஸ் எதுக்கு... மோட்டோக்ராஸ் இருக்கு!

நீங்களும் ரேஸர் ஆகலாம்! - தொடர் - 4

சுலபமான ஒரு விஷயத்தைச் செய்துவிட்டு, கஷ்டமானதைச் செய்யச் சொன்னால் திணறிப் போவோம்தானே? இதுவே கஷ்டமான ஒரு டாஸ்க்கைச் செய்துவிட்டால், அடுத்து வரும் எல்லாமே சுலபமாக முடியும். அப்படிப்பட்ட கஷ்டமான ஒரு டாஸ்க்தான் - மோட்டோக்ராஸ். அதாவது, இங்கே சுலபமான டாஸ்க் என்பது சாதாரண சிமென்ட் ட்ராக்கில் பைக் ஓட்டுவது. மோட்டோக்ராஸ் என்பது சாலையைத் தவிர எல்லா பாதைகளிலும் பைக் ஓட்டுவது.

சாதாரண சாலையில் பைக் ஓட்டும்போது பெரிதாக என்ன சிக்கல்கள் வரும்? கார்னரிங், பிரேக்கிங், குறுக்கீடுகள். இதுவே சாலையே இல்லாத பாதைகளில் பைக் ஓட்டிப்பாருங்கள். ஏகப்பட்ட டாஸ்க்குகள் வரும். திறமைகளும் வளரும். புரியும்படி சொன்னால், கார்களில் செய்யும் ஆப்ரோடு சாகசங்களை பைக்கில் செய்தால், அதுதான் மோட்டோக்ராஸ். மோட்டோக்ராஸ் பைக்குகளில் நடக்கும் ரேஸ்களுக்கு `டர்ட் ட்ராக் ரேஸ்’ என்று இன்னொரு பெயரும் உண்டு.

நீங்க எப்படி பீல் பண்றீங்க