கற்பது களிமண் அளவு! | Theory of colors - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/04/2019)

கற்பது களிமண் அளவு!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - 16 - தொடர்

ளிமண்ணைச் சிலையாக்கி, அதற்கு உயிர் கொடுத்து ஓடவிடுவதில் இருந்தே `இன்ஜினீயரிங் டிசைன்’ ஆரம்பிக்கிறது. ஆனால், `க்ரியேட்டிவ் டிசைன்’ என்ற ரகசிய வித்தையை நாம் கையிலெடுக்கப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போதுதான் இது என்ன என்று தொட்டுப்பார்க்கிறோம். இதில் நிபுணத்துவம் பெறவேண்டும் என்றால், இதற்கான முன் பயிற்சிகளை கல்வித்துறை கையில் எடுப்பது மிக மிக அவசியம். ஓவியம் மற்றும் சிற்பக்கலைக் கல்விக்கு - கார் டிசைன், கார் ஸ்கெட்சிங், கார் க்ளே மாடலிங் போன்ற விஷயங்கள் இன்னும் சென்று சேரவில்லை. சொல்லப்போனால், பாடத்திட்டத்தில் இருக்கும் `பெர்ஸ்பெக்டிவ் டிராயிங்’ (Perspective Drawing) என்ற ஓவிய உத்தி குறித்த அடிப்படை, இன்னும் ஓவிய, சிற்ப, வடிவமைப்பு, பொறியியல் கல்விக்கூடங்களைச் சென்றடையவில்லை.  அது பாடத்திட்டத்தில் அப்படியே அதே இடத்தில் இருக்கிறது. ஆனால், ஐரோப்பிய ஓவியர்களால் 15-16ம் நூற்றாண்டிலேயே ஆர்வத்துடன் ஆராயப்பட்டு, விவாதிக்கப்பட்டு கையாளப்பட்டுள்ளது. இந்த யுக்தியைச் சரிவரப் புரிந்து கொள்ளாமலேயே இன்றைக்கும் நம்முடைய ஓவியம், வடிவமைப்பு, அனிமேஷன் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.