பாசம் இல்லை... மோகம்! - க்ளாசிக் கார்னர் - வின்டேஜ் கலெக்டர் | Vintage Collector - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/04/2019)

பாசம் இல்லை... மோகம்! - க்ளாசிக் கார்னர் - வின்டேஜ் கலெக்டர்

‘காரைக்குடியில் வின்டேஜ் கலெக்டர்கள் இருக்கிறார்களா?’ என்று கேட்பவர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தது, கடந்த ஆண்டு நடைபெற்ற காரைக்குடி வின்டேஜ் கார் ஷோ. ‘’என் கராஜை வந்து பார்க்கிறீங்களா?’’ என்று அழைப்பு விடுத்திருந்தார், அதன் ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரான லெட்சுமணன். அவரின் கார் கராஜைப் பார்வையிடச் சென்றிருந்தேன். 7 வின்டேஜ் கார்கள், 8 வின்டேஜ் மோட்டார் பைக்ஸ், பார்க்கவே மிகவும் அரிதான ஒரு லேம்ப்ரெட்டா ஆட்டோ எனச் சின்ன அருங்காட்சியகமே வைத்திருந்தார் லெட்சுமணன். இவர் CCTV கேமராக்களைப் பொருத்தும் நிறுவனம் நடத்தி வருகிறார். தன் தாத்தாவின் போட்டோவில் இருந்த வேன் ஒன்றைத் தேடிச் சென்றபோதுதான், இந்த ஆர்வம் தொற்றிக்கொண்டதாக பிளாஷ்பேக் சென்றார்.