மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில் | Question and Answers about Automobiles - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/04/2019)

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

``நான் RE க்ளாஸிக் 350 பைக்கைப் பயன்படுத்தி வருகிறேன். பெட்ரோல் விலையும் மைலேஜும் எனக்குக் கட்டுப்படியாகவில்லை. எனவே, எலெக்ட்ரிக் டூ-வீலர் வாங்கலாம் என்ற யோசனையில் இருக்கிறேன். சிங்கிள் சார்ஜில் 100 கி.மீ ஓடக்கூடிய வாகனங்கள் எவை? எலெக்ட்ரிக் டூ-வீலர் செக்மென்ட்டில், ஏதும் புதிய வாகனங்கள் வரப்போகின்றனவா?’’
-  ப. ஜெயப்பிரகாஷ், பண்ருட்டி.


``Ultra Violette, 22 மோட்டார்ஸ், Emflux போன்ற புதிய நிறுவனங்கள், தமது எலெக்ட்ரிக் டூ-வீலர்களை இந்தியாவில் களமிறக்க உள்ளன. வருங்காலத்தில் (2020-ம் ஆண்டில்) பஜாஜ், பெனெல்லி, சுஸூகி, யமஹா போன்ற பெரிய நிறுவனங்களின் தயாரிப்புகள் வரலாம். ஏற்கெனவே ஹீரோ, ஆம்பியர், ஒகினவா, ஏத்தர், ரொமாய், யோ பைக்ஸ், விஜயா என பல நிறுவனங்கள், இந்தியாவில் தமது எலெக்ட்ரிக் டூ-வீலர்களை விற்பனை செய்து வருகின்றன. இதில் ஹீரோவின் ஃபோட்டான் கவனம் ஈர்க்கக் கூடியது.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் எடை குறைவான 48v/28ah லித்தியம் ஐயன் பேட்டரி இருந்தும், சிங்கிள் சார்ஜில் 110 கி.மீ மட்டுமே செல்ல முடியும் (அதுவும் எக்கானமி மோடில்). பவர் மோடில் வண்டியை ஓட்டினால், இதன் ரேஞ்ச் 85 கிமீ மட்டுமே! பவர்ஃபுல்லான 1000W/1500W BLDC Hub மோட்டார் இருந்தும், ஃபோட்டான் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு 45 கிமீதான்! தவிர பேட்டரியை ஃபுல் சார்ஜ் ஏற்ற 4-5 மணி நேரம் ஆகும். எனவே, எலெக்ட்ரிக் டூ-வீலர்தான் வேண்டுமென்றால், அதிக ரேஞ்ச்கொண்ட மாடல்கள் வரும் வரை காத்திருப்பது நலம். புதிய வாகனம் மிகவும் அவசரமென்றால், மைலேஜுக்குப் பெயர்போன 100சிசி பைக்குகளில் ஏதேனும் ஒன்றை வாங்கலாம்.’’

நீங்க எப்படி பீல் பண்றீங்க