வின்டேஜ் வாகனம் - பஜாஜ் சேட்டக் 1990
ஜீன்ஸ் போடுபவர்கள் மத்தியில், வேட்டி கட்டுபவர்தான் மனு. ‘ஆனா போட்டோவுல டெர்பி ஜீன்ஸும் ஷூவும் போட்டிருக்காரே’ என்று புத்திசாலித்தனமாக யோசிக்காதீர்கள். ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கும் மனு, தனது அன்றாட வேலைகளுக்குப் பயன்படுத்துவது பல்ஸரோ கேடிஎம் பைக்கோ இல்லை... 1990 மாடல் பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டரைத்தான்.