ஏஸ் டீலக்ஸ்... டீலக்ஸா? சாதாவா? | First Ride cleveland ace deluxe - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/02/2019)

ஏஸ் டீலக்ஸ்... டீலக்ஸா? சாதாவா?

ஃபர்ஸ்ட் ரைடு - க்ளீவ்லேண்ட் ஏஸ் டீலக்ஸ்

ந்தியாவில் அரிசியிலிருந்து ஆட்டோமொபைல் வரை, விலைதான் எல்லாவற்றையும் முடிவு செய்கிறது. 200-300சிசி பைக் செக்மென்ட்டில் யமஹா, கவாஸாகி, பிஎம்டபிள்யூ என சர்வதேச மாடல்கள் ஒரு பக்கம்... பெர்ஃபாமென்ஸில் தெறிக்கவிடும் `Made in India’ டியூக் 390, அப்பாச்சி RR310, இன்டர்செப்டர் 650 ஆகிய பைக்குகள் ஒரு பக்கம் எனப் பலத்தப் போட்டி இருப்பதால், எதைத் தேர்ந்தெடுப்பது என்கிற குழப்பம் நிச்சயம் எல்லோருக்கும் வரும். பல நிறுவனங்கள் முதலில் களமிறங்கப் பயப்படும் இந்த செக்மென்ட்டில், புதிதாக டயர் பதித்திருக்கிறது க்ளீவ்லேண்ட் சைக்கிள்வெர்க்ஸ்.