ரீடர்ஸ் ரிப்போர்ட் - டிவிஎஸ் ரேடியான்
இன்ஜின் I 109.7 சிசி பவர் I 8.4bhp டேங்க் I 10 லிட்டர் எடை I 112 கிலோ
டிவிஎஸ் நிறுவனம் - ஒரு வகையில் விஜய் சேதுபதி மாதிரி. ஆண்டுக்கு 5 படங்கள் ரிலீஸ் ஆவதுபோல், வருடத்துக்கு இரண்டு பைக்குகளை ரிலீஸ் செய்துவிடுகிறது. சென்ற ஆண்டின் இறுதிக்கட்டத்தில் ரிலீஸ் ஆகி, சிறந்த கம்யூட்டர் ஸ்கூட்டர் விருதையும் பெற்றுவிட்டது டிவிஎஸ் ரேடியான். ‘‘ஃபேக்டரியில் ஓட்டியாச்சு. சிட்டிக்குள்ள ஓட்டிப் பார்க்கிறீங்களா?’’ என்று ஒரு அழகான வெள்ளை நிற ரேடியான் பைக்கை நமது அலுவலக வாசலில் நிறுத்திவிட்டுச் சென்றது டிவிஎஸ்.