ஆஃப்ரோடு சீஸன் ஆரம்பமாயிடுச்சு! | First Ride: Hero Extreme 200 Fi - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

ஆஃப்ரோடு சீஸன் ஆரம்பமாயிடுச்சு!

ஃபர்ஸ்ட் ரைடு: ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 Fi

2011-ல் ஹீரோ இம்பல்ஸ் விற்பனைக்கு வந்தபோது, டூயல் ஸ்போர்ட் பைக்குகள் இனி சாரைசாரையாக வரப்போகின்றன என எதிர்பார்த்தோம். ஆனால், `வேங்கையன் மவன்' போல கடைசிவரை ஒத்தையாகவே அது விற்பனையில் இருந்தது. இந்தியாவைப் பொருத்தவரை இம்பல்ஸ் வெற்றியடையவும் இல்லை, தோல்வியடையவும் இல்லை. மாறாக, இந்திய பைக்கிங் சூழலில் எண்டியூரோ/ADV மீதான ஆர்வத்தை அதிகரித்தது. இம்பல்ஸ் ஏற்படுத்திய அலையைத் தக்கவைக்க, ஹீரோ இப்போது எக்ஸ்பல்ஸ் 200 பைக்கை விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது. இந்த பைக் எண்டியூரோ ரசிகர்களை ஈர்க்குமா?