டிக்‌ஷ்னரி | Dictionary - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

டிக்‌ஷ்னரி

ன்டர்நெட்.... பிரவுசிங் சென்டர்களில் தொடங்கி மொபைல் வரை வந்த இந்த வசதி, தற்போது கார்களுக்கும் வந்துவிட்டது! ஆம், சமீபத்தில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பலத்த பரபரப்பை உண்டாக்கியிருக்கும் MG ஹெக்டர் மற்றும் ஹூண்டாய் வென்யூ ஆகியவை, ‘இந்தியாவின் முதல் இன்டர்நெட் கார்’ என்ற போட்டியில் ஒன்றாகக் குதித்திருக்கின்றன. இந்த இரு எஸ்யூவிகளும், இந்தியாவில் கனெக்டட் கார்கள் என்ற வருங்காலத் தொழில்நுட்பத்துக்கான ஆரம்ப வித்தாக இருக்கும். காரின் இன்ஃபோடெயின் மென்ட் சிஸ்டம், M2M நெட்வொர்க்கில் இயங்கும் விதத்தில் அப்கிரேடு செய்யப்பட்டிருக்கும். கனெக்ட்டிவிட்டி தேவைக்காக, e-SIM ஒன்றும் பொருத்தப்படும். எனவே இதற்கான சர்வருடன், காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் எப்போதும் தொடர்பில் இருக்கும். இதற்கெனப் பிரத்யேகமாக ஒரு மொபைல் செயலி ஒன்றும் உடன் வழங்கப்படும். முன்னே சொன்ன கார்களில் பொதுவாக இருக்கும் வசதிகளைத் தற்போது பார்க்கலாம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க