மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில் | Question and Answers about Automobiles - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

 ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்களில் எத்தனை வகை உண்டு? எனது பட்ஜெட் 7 லட்சம் ரூபாய். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட காரை வாங்க விரும்புகிறேன். எனக்கான சிறந்த ஆப்ஷன்கள் எவை?

- வினோத் பிரபாகர், மயிலாடுதுறை.

ட்டோமேட்டிக் கார்களில் டார்க் கன்வெர்ட்டர், AMT, CVT, ட்வின் கிளட்ச் எனப் பலவகையான கியர்பாக்ஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பான்மையான பட்ஜெட் கார்களில், AMT அல்லது டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸையே பார்க்க முடியும். ப்ரீமியம் ஹேட்ச்பேக் அல்லது மிட் சைஸ் செடான்/எஸ்யூவிகளில்தான், CVT கியர்பாக்ஸைக் காணலாம். டூயல் கிளட்ச் கியர்பாக்ஸ், விலை அதிகமான கார்களில்தான் வழங்கப்படும். நீங்கள் உங்கள் பட்ஜெட் மற்றும் தேவையைச் சொல்லிவிட்டாலும், இது உங்கள் முதல் காரா அல்லது பெட்ரோல்/டீசல் ஆகிய இரண்டில் எது வேண்டும் என்பதைக் குறிப்பிடவில்லை. இருப்பினும், சான்ட்ரோ மற்றும் வேகன்-ஆரின் AMT மாடல்களை நீங்கள் பரிசீலிக்கலாம். டெஸ்ட் டிரைவுக்குப் பிறகு முடிவெடுக்கவும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க