இந்தியாவின் ஒரே ஒரு ஆஃப்ரோடு பயிற்சியாளர்! | Off Road coach Shahnawaz interview - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/05/2019)

இந்தியாவின் ஒரே ஒரு ஆஃப்ரோடு பயிற்சியாளர்!

பேட்டி: ஆஃப்ரோடு பயிற்சியாளர்

ர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அட்வென்ச்சர் ரைடிங் பயிற்சியாளர் என்றால், ஷானவாஸ் கரீம் தவிர இந்தியாவில் வேறு எவரும் இல்லை. International Instructor Academy (IIA)-யால் அங்கீகரிக்கப்பட்ட உலகின் இளம் பயிற்சியாளர். அதாவது, ஷானவாஸிடம் பயிற்சி பெற்று சான்றிதழ் வாங்கினால், உலகின் எந்த டர்ட் டிராக்கிலும் நீங்கள் பைக் ஓட்டலாம்; ரேஸ் போகலாம்; பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். தற்போது ராயல் என்ஃபீல்டு, பிஎம்டபிள்யூ, டுகாட்டி போன்ற நிறுவனங்களோடு இணைந்து, இந்தியாவின் எல்லா பகுதிகளுக்கும் சென்று ஆஃப்ரோடு பயிற்சியுடன், பாதுகாப்பான பயணங்களைப் பற்றியும் இவர் சொல்லிக்கொடுக்கிறார். பிஎம்டபிள்யூ GS எக்ஸ்பீரியன்ஸ் ரைடுக்காக சமீபத்தில் சென்னை வந்திருந்த ஷானவாஸிடம் பேசினேன்.