ப்ரீமியம் பருந்துகள்... ஹைவேஸில் பறக்க எது பெஸ்ட்? | Skoda Octavia vs honda civic (petrol)- Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/05/2019)

ப்ரீமியம் பருந்துகள்... ஹைவேஸில் பறக்க எது பெஸ்ட்?

போட்டி: ஸ்கோடா ஆக்டேவியா VS ஹோண்டா சிவிக் (பெட்ரோல்)

சென்னையில் இருந்து மதுரைக்கோ, கோவைக்கோ ஸ்மூத்தான ஒரு நெடுஞ்சாலைப் பயணம் கிளம்ப வேண்டும் என்றால், பெட்ரோல் செடான்கள்தான் செமயான சாய்ஸ். பெட்ரோல் கார்களின் ஸ்மூத்னெஸ்ஸும், ஸ்டிஃப் சஸ்பென்ஷன் கொண்ட செட்-அப்புகளும் ஹைவேஸில் பருந்துபோல் அசையாமல் பறக்க உதவும். அதுவும் ப்ரீமியம் கார்கள் என்றால், இன்னும் அலாதி சுகம்.

ஸ்கோடா ஆக்டேவியா, அப்படிப்பட்ட ஒரு பருந்து அனுபவத்தைத் தருவதில் எக்ஸ்பர்ட். 2013 இறுதியில் வெளிவந்த ஆக்டேவியாவுக்குப் போட்டியாக டொயோட்டா கரோலா ஆல்ட்டிஸ், ஹூண்டாய் எலான்ட்ரா போன்ற கார்கள் இருந்தாலும், ஆக்டேவியாவின் தரத்துக்கும் ஓட்டுதலுக்கும் ஈடுகொடுக்க முடியவில்லை. `இதோ வந்துட்டேன்’ என்று சரியான நேரத்தில் ஆக்டேவியாவுக்குப் போட்டியாக வந்திருக்கிறது 10-வது தலைமுறை ஹோண்டா சிவிக்.  இரண்டு பெட்ரோல் ப்ரீமியம் பருந்துகளிலும் ஒரு ஜிவ் டிரைவ். எது சூப்பர் எனப் பார்க்கலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க