SPY PHOTO - ரகசிய கேமரா: ராயல் என்ஃபீல்டின் புது க்ளாஸிக் & தண்டர்பேர்டு! | spy photo - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/05/2019)

SPY PHOTO - ரகசிய கேமரா: ராயல் என்ஃபீல்டின் புது க்ளாஸிக் & தண்டர்பேர்டு!

ராயல் என்ஃபீல்டு க்ளாஸிக் சீரிஸ்.... சரிவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அந்த நிறுவனத்தின் பைக் விற்பனையை, 2009-ம் ஆண்டு முதலாகத் தூக்கி நிறுத்திய பைக். புதிய கலர் ஆப்ஷன்கள், ஸ்பெஷல் எடிஷன்கள், பின்பக்க டிஸ்க் பிரேக், டூயல் சேனல் ஏபிஎஸ் எனச் சின்னச் சின்ன அப்டேட்கள் வந்தாலும், ஒரு முழுமையான மாற்றம் க்ளாஸிக் சீரிஸுக்கு நிச்சயம் தேவைப்படவே செய்கிறது. எனவே, இதன் பேஸ்லிஃப்ட் மாடலைத் தயாரிக்கும் பணியில் தற்போது ஈடுபட்டிருக்கிறது ராயல் என்ஃபீல்டு. இந்நிலையில் சென்னையில் புதிய க்ளாஸிக் மற்றும் தண்டர்பேர்டு பைக்குகள் டெஸ்ட் செய்யப்பட்டுக் கொண்டிருந்தபோது படம் பிடித்திருக்கிறார், சென்னையைச் சேர்ந்த நாகா.

நீங்க எப்படி பீல் பண்றீங்க