Published:Updated:

Hello விகடன்: `நோ Noise, Full வாய்ஸ்' - இன்று தொடங்குகிறது புதிய அத்தியாயம்!

பிரின்ட்டிலிருந்து ஓடிடி வரை பாய்ச்சல் காட்டிய விகடன் இன்று முதல் Podcast-டிலும் களம் காண்கிறது.

காலத்திற்கு ஏற்றார் போல் மக்களின் தேவை மற்றும் ரசனைக்கு ஏற்றார் போல எப்போதும் தம்மை தகவமைத்து கொண்டே இருக்கும் விகடன் இப்போது Podcastலும் இறங்குகிறது.

விகடனின் இந்த podcast-ன் பெயர், ‘Hello விகடன்’. இந்தப் பெயரும் வாசகர்களாகிய நீங்கள் தேர்வு செய்த பெயர்தான்.

நீங்கள் விகடனில் படித்தத் தொடர்களை, பார்த்து ரசித்த வீடியோக்களை இனி ‘Hello விகடன்'-ல் கேட்டு ரசிக்கலாம்.

ஏற்கெனவே சோதனை முயற்சிகளாக சில கட்டுரைகளை விகடன் podcast வடிவத்தில் தந்திருக்கிறது. அதற்கு வாசகர்கள் அளித்த ஆதரவு பெரிது.

இதனை கருத்தில் கொண்டு விகடன் பல நிகழ்ச்சிகளை Podcastல் தர இருக்கிறது. இதன் முதல்கட்டமாக MS Dhoniயின் கதை, Mr K Crime Series, பெரியோர்களே தாய்மார்களே மற்றும் ஜெயில் மதில் திகில் ஆகிய தொடர்களை இன்று முதல் வழங்க இருக்கிறது.

இதனை நீங்கள் Spotify, Gaana, apple podcasts மற்றும் Google Podcastல் கேட்டு ரசிக்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விகடனின் அனைத்து புது முயற்சிகளுக்கும் துணை நின்ற நீங்கள் நிச்சயம் இதற்கும் பெரும் ஆதரவு அளிப்பீர்கள் என நம்புகிறோம். உங்களுக்குப் பிடித்தமான விஷயத்தைப் பிடித்தமான விதத்தில் தர வேண்டும் என்பதில் நாங்கள் மிக உறுதியாக இருக்கிறோம்.

நீங்கள் என்ன மாதிரியான நிகழ்ச்சிகளை ‘Hello விகடன்'-ல் கேட்க விரும்புகிறீர்கள் என கமெண்ட் செக்‌ஷனில் கூறுங்கள். அதனை உங்களுக்குப் பிடித்தமான நடையில், ஈர்க்கும் குரலில் உங்களுக்கு வழங்குகிறோம்.

Hello விகடன்
Hello விகடன்

இத்துடன் நிகழ்ச்சியின் Linkஐ இணைத்துள்ளோம். கேட்டு ரசியுங்கள்; பகிருங்கள்; உங்கள் ஆலோசனைகளை எங்களுக்கு கூறுங்கள்.

இணைய தலைமுறையை சந்திக்க… இளைய தளத்திற்கு வருகிறோம்..!

நன்றி!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு