Published:Updated:

``வாழ்க்கையோட முதல் பார்ட் இளவரசி மாதிரி பார்த்துக்குச்சு... செகண்ட் பார்ட்ல?!''- ஆர்ஜே சுசித்ரா

''சில கேள்விகள் வர்றப்போ 'அப்படியே அடங்கிடு, அமைதியா இருந்திடு, இதையும் கடந்து போலாம்'னு மனசுக்குள்ள இருந்து ஒரு குரல் சொல்லும். இதைத்தான் நான் ஃபாலோ பண்றேன்.''

சுச்சி இஸ் பேக். மீண்டும் ரேடியோ ஜாக்கியாக அதே உற்சாகம், கொண்டாட்டம், துள்ளலோடு இரண்டாவது இன்னிங்ஸை அட்டகாசமாகத் தொடங்கியிருக்கிறார் சுசித்ரா.

''நான், ரொம்ப என்ர்ஜெட்டிக்கான பொண்ணு. வாழ்க்கையோட முதல் பார்ட் இளவரசி மாதிரி என்னைப் பார்த்துக்குச்சு. 'Alice in Wonderland' படம் மாதிரினு சொல்லலாம். இதுல வர்ற ஆலிஸ் தோட்டத்துல ஓடிக்கிட்டே இருக்குறப்போ டக்குனு ஒரு குழியில விழுந்திடுவா. இந்தக் குழிக்குள்ள அவளுக்கு விசித்திரமான விஷயங்கள்லாம் நடக்கும். இப்படியெல்லாம்கூட மனுஷங்களானு யோசிக்குற மாதிரியான நபர்களைச் சந்திப்பா. நிறைய சவால்களை அங்க பார்த்துட்டுத் திரும்பவும் நார்மலான அவங்க உலகத்துக்குள்ள வந்துடுவாங்க. அப்படித்தான் நானும். சூழ்நிலை என்னை மாத்தியிருக்கு. எப்பவும் எனக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். என்னை மாத்திக்கணும்னு நான் நினைச்சதில்ல. இருந்தும், நடந்து முடிஞ்ச சில சம்பவங்களும் நான் சந்திச்ச சில மனுஷங்களும் என்னை ஆச்சர்யத்துக்கு உள்ளாக்கியிருக்காங்க. 'Alice in wonderland' மாதிரி வித்தியாசங்கள், விசித்திரங்களைப் பார்த்துட்டு திரும்ப வந்திருக்கேன்'' எனச் சிரிக்கும் சுசித்ராவின் சிரிப்புக்குப் பின்னால் இருந்து எட்டிப்பார்க்கிறது அந்த ஆலிஸின் அப்பழுக்கற்ற அன்பு. சுசித்ராவிடம் தொடர்ந்து பேசினேன்.

''12 வருஷத்துக்கு அப்புறம் ஆர்.ஜே மைக் கையிலே எடுத்திருக்கேன். இந்த ஃபீல் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. ரொம்ப நாளா பயன்படுத்தாம வெச்சிருந்த சைக்கிளை திடீர்னு எடுக்குறப்போ ஓடுமா, ஓடாதானு டவுட் இருக்கும். எல்லோரும், 'சைக்கிள்தானே... எடுத்து ஓட்ட ஆரம்பிச்சா ஞாபகத்துக்கு வந்துடும்'னு சொல்லுவாங்க. ஆனா, ஓட்டணும்னு நினைக்குறவங்களுக்கு சந்தேகமாவே இருக்கும். அதே மாதிரிதான் திரும்பவும் ஆர்.ஜே-வா வந்தப்போ நம்ம வாய்ஸை மக்கள் திரும்பவும் ஏத்துக்குவாங்களானு சந்தேகம் இருந்தது, நிறைய லிசனர்ஸ் ஷோ கேட்டுட்டு, 'ரொம்ப எனர்ஜியா, சிரிச்சிக்கிட்டே இருக்கீங்க, மெச்சூர்டா பேசுறீங்க'னு சொன்னாங்க. கேட்குறப்போ ஹேப்பியா இருக்கு.

Suchitra
Suchitra

இப்போ இருக்குற ஆர்.ஜே எல்லாரும் தூள் கிளப்பிட்டு இருக்காங்க. வேற லெவல்ல ஷோ பண்ணிட்டு இருக்காங்க. கொஞ்சநாளா ரேடியோ கேட்கமா இருந்தேன். எந்த மாதிரி ஷோ போய்ட்டு இருக்குனு தெரிஞ்சிக்க திரும்பவும் கேட்க ஆரம்பிச்சேன். மிர்ச்சி ஆர்.ஜே சபா ஷோ எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அவர் செமயா கலக்கிட்டு இருக்கார். அவரை நேர்ல பார்க்கணும்னு நினைச்சேன். லாக்டெளன்னால பார்க்க முடியல. என்னோட ஒரு ஹீரோவைப் பார்க்க முடியாதமாதிரி இருக்கு. 'சபா ஐ லவ் யூ'னு சொன்னேன். 'ஐ லவ் யூ டூ அக்கா'னு சொன்னார். மிர்ச்சி செந்தில், ஷோ கேட்டுட்டு, 'பழைய சுசித்ராவா திரும்ப வந்துட்டீங்க'னு சொன்னார்.''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

''இந்த செகண்ட் இன்னிங்ஸ் எப்படியிருக்கு?''

''பல வருஷமா இருட்டா இருந்த ரூம்ல லைட் போட்ட மாதிரியிருக்கு. வாழ்க்கை மாறியிருக்குனு உணர முடியுது. ஆனா, எந்தளவுக்கு மாறியிருக்குனு தெரியல. லாக்டெளனால ஆபீஸ் ஸ்டூடியோவுல ஷோ பண்ண முடியல. வீட்ல என்னோட கிச்சன் ஸ்டூடியோவுல இருந்துதான் ஷோ ரெக்கார்டு பண்ணிட்டு இருக்கேன். அதனால லைவ் ஷோ போறப்போதான் நிஜமான எஃபெக்ட் தெரியும். ஒரு பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கும். இப்பவும்  ஒரு ஃபீல் இருக்கு. மெச்சூரிட்டி லெவல் கூடியிருக்கு. 12 வருஷத்துக்கு முன்னாடியும் சிரிச்சிக்கிட்டுதான் ஷோ பண்ணிட்டு இருந்தேன். இப்பவும் ஷோ டைம்ல சிரிக்குறேன். ஆனா, ரெண்டு சிரிப்புக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு. கொரோனா நேரத்துல எல்லாரும் ஹாஸ்டல்ல மாட்டிக்கிட்ட பசங்க மாதிரி மாட்டிக்கிட்டிருக்கோம். இந்த நேரத்துல என்னோட ஷோ மூலமா ரேடியோ கேட்குறவங்களை ரிலாக்ஸ் பண்ண முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்.''

வாணிஶ்ரீயின் மகன் அபிநய் தற்கொலைக்குக் காரணம் என்ன... திருக்கழுக்குன்றத்தில் என்ன நடந்தது?

''இந்த ரீ -என்ட்ரிக்கு உங்களோட நலவிரும்பிகள் என்ன சொன்னாங்க?''

Suchitra
Suchitra

''யாருமே வேண்டாம்னு சொல்லல. சொல்லப்போனா என்னோட கரியர் ஸ்டார்ட்டான அதே ரேடியோ ஸ்டேஷன்ல அதே டைம் பேண்ட்ல ஷோ கிடைச்சிருக்கு. வாழ்க்கைல திரும்பவும் நல்ல விஷயங்கள் நடக்குற மாதிரியிருக்கு. என் கைல ஒரு மாங்காய் கிடைச்சா உடனே கடிச்சு சாப்பிட விரும்ப மாட்டேன். இந்த மாங்காய் புளிக்குமா, இனிக்குமா, கசக்குமானு ரொம்ப யோசிச்சுதான் சாப்பிடுவேன். ஆனா, இந்த முறை மட்டும் மாங்காயை உடனே கடிச்சிட்டேன். புளிப்பா இல்ல இனிக்குது. ஷோ பண்ண ஆரம்பிச்சு சில வாரங்கள் ஆகுது. ஒரே ஒரு மொபைல் போன் மூலமா என் நேயர்களோட கனெக்ட் ஆகியிருக்கேன். பேசுறப்போ அடிக்கடி 'ப்ரோ'னு வார்த்தை யூஸ் பண்றேன். பசங்க, பொண்ணுங்க யாரா இருந்தாலும் இப்படிதான் கூப்பிட்டிருக்கேன். நிறைய போன் கால்ஸ் பசங்ககிட்ட இருந்துதான் வருது. எல்லாருக்குமே இந்த வார்த்தை பிடிச்சிருக்கு. புதிய நேயர்கள் கிடைச்சிருக்காங்க. எல்லாரும் ரொம்ப நல்லாவே பேசி வெல்கம் பண்ணாங்க. அதிகமான 'ப்ரோ'ஸ் என்னை அக்கானு கூப்பிடுறாங்க. இது ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு. எனக்கு ப்ரோ இல்லனு ரொம்ப ஃபீல் பண்ணியிருக்கேன். இப்போ இத்தனை ப்ரோஸ் கிடைச்சிட்டாங்க. செம ஹேப்பி.''

''ஒரு நல்ல ஆர்ஜே எப்படி ஷோ பண்ணணும்?''

Suchitra
Suchitra

''மைக்  கைல கிடைச்சிட்டா ஏனோ, தானோனு பேசுறது ஆர்.ஜே வேலை இல்லை. ஒரு ஷோவுக்குப் போறதுக்கு முன்னாடி நிறைய ப்ராக்டீஸ் பண்ணணும். இன்னைக்கு ஷோவை எப்படி எடுத்துக்கிட்டுப் போலாம்னு தயாரிப்பாளர்கூட டிஸ்கஸ் பண்ணணும். அதுவும் நான் பண்ணிட்டு இருக்குறது மார்னிங் பிரேக் ஃபாஸ்ட் ஷோங்கிறது பெரிய வாழை இலைல ஃபுல் மீல்ஸ் ரெடி பண்ணி வெக்குற மாதிரி. மக்கள் தெரிஞ்சிக்க வேண்டிய செய்திகளை சுவாரஸ்யமா சொல்லணும்.''

''ரேடியோ வழியா இருக்குற டிஜிட்டல் மீடியா-ல விஜே-வா எதிர்பார்க்கலாமா?''

''நிச்சயமா எதிர்பார்க்கலாம். மிர்ச்சில திரும்ப வர்றப்போ டிஜிட்டல் வழியா பல விஷயங்கள் பண்ற மாதிரிதான் பேசினோம். லாக்டெளன்ல இருக்குறதுனால வீடியோ ஜாக்கி அவதாரம் எடுக்க முடியல. எல்லாம் சரியானதுக்குப் பிறகு சீக்கிரம் பார்க்கலாம்.''

"தமிழு, கலரு... நீங்க ஹீரோயின் மெட்டீரியலே இல்லைனு சொன்னாங்க!"- ஐஸ்வர்யா ராஜேஷின் ஃப்ளாஷ்பேக்

''தர்மசங்கடமான கேள்விகள் வர்றப்போ அதை எப்படி கடந்து வர்றீங்க?''

''சில கேள்விகள் வர்றப்போ 'அப்படியே அடங்கிடு, அமைதியா இருந்திடு, இதையும் கடந்து போலாம்'னு மனசுக்குள்ள இருந்து ஒரு குரல் சொல்லும். இதைத்தான் நான் ஃபாலோ பண்றேன். கேள்விகள் நம்மை நோக்கி வர்றதை தவிர்க்க முடியாது. எல்லாத்தையும் சந்திச்சுதான் ஆகணும்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு