கமாடிட்டி டிரேடிங் - மெட்டல் & ஆயில்

டந்த சில தினங்களாக தங்கத்தின் விலை சரிந்து வருகிறது. எனவே, அதன் விலைப்போக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து விளக்குகிறார் ஷியாம் சுந்தர்.

தங்கம்!

“ தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக வெகுவாகச் சரிந்து வருகிறது. தங்கத்தின் விலை குறைய சர்வதேச சந்தையில் நிலவும் பிரச்னைகள் முக்கியக் காரணமாக உள்ளன. அதாவது, அமெரிக்க டாலரின் மதிப்பு உயரும் சமயங்களில் தங்கத்தின் விலை சரியும். அமெரிக்க டாலரின் மதிப்பு வளர்ந்த ஆறு நாடுகளின் நாணயங்களுக்கு எதிராக அதிகரித்துள்ளது. இதில் யூரோவின் பங்களிப்பு 55 சத விகிதத்துக்குமேல் உள்ளது. வளர்ந்த நாடுகளின் வளர்ச்சி தடைபடும் சமயங்களில் டாலரின் மதிப்பு உயரும்.

2013-ம் ஆண்டு ஆகஸ்ட் 28 மும்பை மார்க்கெட்டில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.33,625ஆக இருந்தது. அந்தச் சமயத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.68.85-ஆக இருந்தது.

ரிசர்வ் வங்கியிடம் 2011-ல் சுமார் 557.75 மெட்ரிக் டன் தங்கம் இருந்தது. அப்போது 37.8 பில்லியன் டாலராக இருந்த மதிப்பு தற்போது 44 சதவிகிதம் குறைந்து 21.1 பில்லியன் டாலராக உள்ளது.

பொதுவாக, தங்கத்தின் நுகர்வு என்பது கிராமப்புறங்களில் அதிகமாக இருக்கும். ஆனால், இந்த வருடம் பருவமழை சரியில்லாதக் காரணத்தினால் சாகுபடி பாதிப்படையும். இதனால் தங்கம் வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர்.

தங்கத்தின் விலை வீழ்ச்சி அடைவதற்கு உலக அளவில் பல  காரணங்கள் உள்ளன. டாலரின் மதிப்பு 20 சதவிகிதம் உயர்ந்தால், தங்கத்தின் விழ்ச்சி தொடரும் என்றே சொல்லப்படுகிறது. அதாவது, ஒரு அவுன்ஸ் தங்கத் தின் விலை 850 டாலர் வரை குறையலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.

மேலும், 2015-ம் ஆண்டு முழுவதும் தங்கத்தின் வீழ்ச்சி இருக்கும். 2016-ம் ஆண்டுதான் தங்கத்தின் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.”

வெள்ளி!

வெள்ளியின் விலையிலும் வீழ்ச்சி காணப்படுகிறது. தங்கத் தின் விலை சரியும்போதெல்லாம் வெள்ளியின் விலையும் சரியும். சீனாவில் நிலவும் பிரச்னைகளால் உலோகங்களின் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது. அதன் அடிப்படையில் வெள்ளியின் விலையும் வீழ்ச்சியடைகிறது.

சீனாவில் 40 சதவிகித வெள்ளி நுகர்வு செய்யப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை காலை ஒரு அவுன்ஸ் வெள்ளி 14.43 டாலர் என்ற நிலையில் வர்த்தகமானது. வரும் நாட்களில் வெள்ளியின் விலை சரிவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளது.

கச்சா எண்ணெய்!

கச்சா எண்ணெய்யின் விலை சர்வதேச சந்தையில் வெகுவாகக் குறைந்துள்ளது. டபிள்யூடிஐ மற்றும் பிரென்ட் கச்சா எண்ணெய்யின் செப்டம்பர் மாத கான்ட்ராக்ட் 1.50 சதவிகிதம் சரிந்து, ஒரு பேரலின் விலை 48.85 டாலராக இருந்தது. இரண்டு நாள் வர்த்தகத்தில் கச்சா எண்ணெய்யின் விலை 5 சத விகிதம் குறைந்து வர்த்தகமானது.

உலகப் பொருளாதாரத்தில் நிலவும் சிக்கல் மற்றும் அதிகக் கையிருப்புக் காரணமாக கச்சா எண்ணெய்யின் விலை சரிந்து வருகிறது. ஈரான் அணு ஒப்பந்த மும் விலை குறைய முக்கிய காரணமாகும்.

வரும் வாரங்களில் விலை இறக்கம் தொடரும் என எதிர் பார்க்கப்படுகிறது.

இரா.ரூபாவதி


கமாடிட்டியில் சந்தேகமா?

கமாடிட்டி குறித்த உங்களின் அத்தனை சந்தேகங்களையும்  044-66802920 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யுங்கள். உங்கள் அழைப்பின்போது எதிர் முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்கமாட்டார்கள். அந்த இரண்டு நிமிடம் முழுக்க முழுக்க  உங்களுக்கே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick