மோடி செய்யக்கூடாத வரலாற்றுத் தவறு!

மீண்டுமொருமுறை ரிசர்வ் வங்கியுடன் மோதப் பார்க்கிறது மத்திய அரசாங்கம். முக்கிய நிதிக் கொள்கைகளை உருவாக்கும் குழுவில் ரிசர்வ் வங்கியின் சார்பில் இடம்பெறும் உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைப்பதன் மூலம் அதன் அதிகாரத்தைப் பறித்து, தான் ஊதும் மகுடிக்கேற்ப ஆடும் பாம்பாக மாற்ற முயற்சித்திருக்கிறது.

நிதிக் கொள்கைகளை உருவாக்கும் குழு பற்றி உர்ஜித் கமிட்டி செய்த பரிந்துரைக்குப் பதிலாக வேறொரு திட்டத்தை முன்வைத்திருக்கிறது மத்திய அரசாங்கம். அதன்படி, இந்தக் குழுவில் இருவர் ஆர்பிஐ சார்பிலும் (ஆர்பிஐ கவர்னர் அதில் ஒருவர்), ஒருவர் ஆர்பிஐயினாலும் நியமிக்கப்படுவார். மீதமுள்ள நான்குபேர் மத்திய அரசினால் நியமிக்கப்படுவார்கள். இதன்மூலம் நிதிக் கொள்கைகள் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதில் ஆர்பிஐ-க்கு இருக்கும் அதிகாரத்தைப் பிடுங்க நினைத்திருக்கிறது மத்திய அரசாங்கம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்