கமாடிட்டி டிரேடிங் - மெட்டல் & ஆயில்

தங்கம்!

கடந்த ஒரு மாதமாகவே தங்கத்தின் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது. அதாவது, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,175 டாலரிலிருந்து 1,080 டாலராகக் குறைந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் அமெரிக்கா ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு, டாலரின் மதிப்பு வலிமையடைந்து வருவது போன்றவையாகும். ஆனால், வட்டி விகிதத்தை உயர்த்து வதற்கு சில புள்ளிவிவரங்களை அமெரிக்கா அடிப்படையாக வைத்துள்ளது. ஆனால், இந்தப் புள்ளிவிவரங்கள் ஒரு மாதம் அதிகரித்தும் ஒரு மாதம் குறைந் தும் வெளிவருகிறது. சமீபத்தில் வெளியான புதிய வீடுகள் விற்பனை விவரம், அமெரிக்க அரசு எதிர்பார்த்த அளவில் இல்லை.

மேலும், வருகிற ஆகஸ்ட் 7-ம் தேதி வேலை வாய்ப்பு விவரம் வெளியாக உள்ளது. அமெரிக்கா ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை வருகிற செப்டம்பர் அல்லது டிசம்பர் மாதத்துக்கு முன் உயர்த்த வாய்ப்புள்ளது.

கடந்த புதன் கிழமை தங்கத்தின் விலை ஓரளவு நிலைபெற்றது. ஆனால், இந்த விலை கடந்த ஐந்தரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம், தங்கத்தின் தேவை யானது உலக அளவில் 6 வருடங் களில் இல்லாத அளவுக்கு குறைந் துள்ளது. இது, இன்னும் 30 சத விகிதம் குறையும் என எதிர்பார்க் கப்படுகிறது.

10 கிராம் தங்கத்தின் விலையானது ரூ. 24,450 என்ற சப்போர்ட் நிலையை அடைய வாய்ப்புள்ளது. இந்த நிலை உடைக்கப்படாவிட்டால் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.24,600-க்கு உயரும்.

வெள்ளி!

தங்கத்தின் விலை சரியும் போதெல்லாம் வெள்ளியின் விலையும் சரியும். இந்தியாவைப் பொறுத்தவரை, வெள்ளியை ஆபரணமாகப் பயன்படுத்துவது மிகவும் குறைவு. ஆனால், தற்போது சோலார் உற்பத்தியில் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

இதனால் சோலார் உற்பத்தித் துறைக்கு மட்டும், வரும் ஆண்டில் 100 மில்லியன் அவுன்ஸ் வெள்ளியின் தேவை உள்ளது. இது, வரும் ஆண்டுகளில் உயர வாய்ப்புள்ளது. ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை சர்வதேச சந்தையில் 14.57 டாலருக்கு வர்த்தகமானது. வரும் வாரத்தில் விலை அதிகரிக்க வாய்ப்பில்லை.

கச்சா எண்ணெய்!

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் வரத்து அதிக அளவில் உள்ளது. ஒபெக் அமைப்பு எந்தக் காரணத்தைக் கொண்டும் கச்சா எண்ணெய்யின் உற்பத்தியைக் குறைக்க தயாராக இல்லை. மேலும், ஒபெக் நாடுகள் நாளொன்றுக்கு 3 ஆயிரம் மில்லி யன் பேரல் கச்சா எண்ணெய்யை அதிகமாக உற்பத்தி செய்கின்றன.

கடந்த புதன் அன்று கச்சா எண்ணெய்யின் விலை 2 சத விகித ஏற்றம் கண்டது. அதாவது, 3110-3090 என்ற சப்போர்ட் நிலை யில் வர்த்தகமாக வாய்ப்புள்ளது. இந்த நிலையை அடையாமல் விலை உயர ஆரம்பித்தால் 3,170-3,190 என்ற நிலையில் வர்த்தக மாகும். இதற்கு அடுத்த ரெசிஸ்டன்ஸ் 3200 - 3220 ஆக இருக்கும்.

காப்பர்!

காப்பரின் விலை ரூ 336 நிலை யில் குறைந்து வர்த்தகமாகிறது. இதற்கு முக்கியக் காரணம், உலக அளவில் உலோகங்களின் தேவை குறைந்து வருகிறது. சிலியன் (Chilean) சுரங்கம் இந்த வருடத்துக் கான காப்பர் உற்பத்தியைக் குறைத்துள்ளது.

அதாவது, 6,95,000 டன்னிலிருந்து 6,64,000 ஆகக் குறைத்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம், மேசமான பருவநிலை உருவாகும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

உலோக நுகர்வில் சீனா முதல் இடத்தில் உள்ளது. அங்கு தற்போது பங்குச் சந்தை சரிவு, பொருளாதார மந்தநிலை காரண மாக உலோகங்களின் தேவை குறைந்துள்ளது.

இதன் காரணமாகக் கடந்த திங்கள் அன்று, ஆறு  ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு காப்பரின் விலை குறைந்தது. வரும் வாரத்தில் விலை குறைய வாய்ப்புள்ளது.

இரா.ரூபாவதி


கமாடிட்டியில் சந்தேகமா?

கமாடிட்டி குறித்த உங்களின் அத்தனை சந்தேகங்களையும்  044-66802920 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யுங்கள். உங்கள் அழைப்பின்போது எதிர் முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்கமாட்டார்கள். அந்த இரண்டு நிமிடம் முழுக்க முழுக்க  உங்களுக்கே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick