கமாடிட்டி டிரேடிங் - அக்ரி கமாடிட்டி

ந்த வாரம் மிளகின் விலை போக்கை பற்றி விளக்குகிறார் அலைஸ் ப்ளூ நிறுவனத்தின் தலைவர் கே.ராஜேஷ்.

சென்னா (Chana)

சென்னாவின் தேவையைவிட சப்ளை கூடுதலாக இருப்பதால், செப்டம்பர் மாத ஃப்யூச்சர்ஸ் மூன்று சதவிகிதத்துக்கு மேல் இறக்கம் கண்டு 4,336 ரூபாய் என்ற அளவில் கடந்த வியாழன் அன்று வர்த்தகமாகியது. பருவப் பயிர்கள் மற்றும் பருப்பு வகைகள் பயிரிடப்படும் பகுதிகளில், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நல்ல மழைப்பொழிவு இருந்ததும் சென்னாவின் விலை குறையக் காரணமாகக் கருதப்படுகிறது.

கடந்த 2015 ஏப்ரல் மாதம் மட்டும் இந்தியா 39,270 டன் சென்னாவை இறக்குமதி செய்திருப்பதாக அரசு தெரிவித்திருக்கிறது. அதுவும், அதிக விலை கொடுத்து அதிக அளவில் சென்னாவை இறக்குமதி செய்து வருகிறது இந்தியா.அடுத்த வாரம் சென்னா பக்கவாட்டில் வர்த்தகமாக அதிக வாய்ப்பு இருக்கிறது. கூடுதல் சப்ளை மற்றும் குறைந்த தேவையினால் இறக்கத்தில் வர்த்தகமாகவும் வாய்ப்பு இருக்கிறது.

பருப்பு வகைகளின் இறக்குமதியில் அரசு தலையீடு, விலைக்கு ஆதரவாக இருக்காது. சென்னாவை வர்த்தகம் செய்யும் வர்த்தகர்களுக்கும், ஸ்டாக்கிஸ்ட்டுகளுக்கும் நல்ல தேவை இருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டியது அவசியம்.

மிளகு (Pepper)

“என்எம்டிசியில் பெப்பர் அக்டோபர் மாத கான்ட்ராக்ட் 62,330 ரூபாய் என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. இந்த வருடம் பருவமழையின் அளவு குறைந்துள்ளதாலும், உற்பத்தி யின் அளவு குறைந்துள்ளதாலும், தேவையின் அளவு அதிகரித்து வருவதால் விலை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்த வாரமும் விலை அதிகரித்து வருவதற்கே வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 62,000 ரூபாய் என்ற வலுவான சப்போர்ட் லெவலுக்கு மேலே வர்த்தகமாவதால், 62,500 என்ற ரெசிஸ்டன்ஸ் லெவலுக்கு மேலே சென்றால், விலை மேலும் அதிகரித்து வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.”

சோயா பீன் (Soybean)

சோயா பீன் ஆகஸ்ட் மாத ஃப்யூச்சர்ஸ் 1.59 சதவிகிதம் குறைந்து 3,096 ரூபாய்க்கு நிறைவடைந்தது. ஜூன் மாதம் வழக்கத்தைவிட நல்ல மழைப்பொழிவு இருந்ததால் இந்தியாவில் சோயா பீன் பயிர் செய்யும் நிலங்களின் அளவு 112 லட்சம் ஹெக்டேரை தாண்டி இருப்பதாகக் கணக்கிடப் பட்டிருக்கிறது. அதேநேரத்தில், 2015 ஜூனில் சோயாபீன் 2,098 டன் ஏற்றுமதி செய்யப்பட்டது, இதே ஜூலை 2015-ல் 928 டன் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. இப்படி 2015 ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூலை மாதம் வரை தொடர்ச்சியாக சோயாபீனின் ஏற்றுமதி சரிந்துகொண்டே வந்திருக்கிறது.

அடுத்த வாரம் சோயாபீன் இறக்கத்திலேயே வர்த்தகமாக அதிக வாய்ப்பிருக்கிறது. கடந்த நான்கு மாதங் களாக சோயாபீன் ஏற்றுமதியில் உள்ள சரிவு, இந்தியாவில் போதுமான அளவு வெஜிடபிள் ஆயில் இருப்பு இருப்பது போன்றவற்றால் சோயாபீனின் சந்தை சென்டிமென்ட் நெகட்டிவ்வாக இருக்கிறது. அதோடு இந்தியாவைப் போலவே, அமெரிக்காவிலும் சோயாபீன் அதிக அளவில் பயிரிடப்பட்டிருப்பதால், விலை ஏற அதிக வாய்ப்பு இல்லை.

கடுகு (Mustard seed)

கடுகு ஃப்யூச்சர்ஸ் கடந்த வியாழன் அன்று 0.53 சதவிகிதம் இறக்கத்தில் வர்த்தகமானது. இந்தியாவில் ராபி கடுகின் உற்பத்தி 57.40 லட்சம் டன்னுக்குப் பதில் 51.6 லட்சம் டன்னாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

உலக அளவில் கடுகின் உற்பத்தி 4.5 மில்லியன் டன் குறைந்து 67.2 மில்லியன் டன்னாக இருக்கும் என அமெரிக்க விவசாயத் துறை (USDA) கணித்திருக்கிறது. ஐரோப்பாவும் 24.3 மெட்ரிக் டன் என்கிற தன் கணிப்பை 21.4 மெட்ரிக் டன்னாகக் குறைத்துக் கொண்டது.
அடுத்த வாரமும் கடுகு விதை பக்கவாட்டிலேயே வர்த்தகமாகும். சந்தையில் எண்ணெய் விதைகளுக்கு உள்ள பலவீனமான சென்டிமென்ட் இதற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.

மு.சா.கெளதமன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick