இனி இல்லை ரியல் எஸ்டேட் ஏமாற்று!

த்தனை காலமும் பெரிய அளவில் முறைப்படுத்தப்படாமலே இருந்த ரியல் எஸ்டேட் தொழில், இப்போது ஒரு கறாரான சட்டதிட்டத்துக்குள் வரும் சூழ்நிலை உருவாகி இருப்பது மகிழ்ச்சியான விஷயமே. மத்திய அரசு கொண்டுவரவிருக்கும் ரியல் எஸ்டேட் (கட்டுப்பாடு மற்றும் வளர்ச்சி) மசோதாவானது, குளிர்காலக் கூட்டத் தொடரிலோ அல்லது அடுத்துவரும் கூட்டத் தொடரிலோ நாடாளுமன்றத் தில் தாக்கலாக வாய்ப்பிருக்கிறது. இந்த மசோதா மட்டும் சட்டமாகிவிட்டால், வீடு வாங்குவதற்காக கண்கள் நிறையக் கனவுகளுடன் வரும் அப்பாவி மக்கள், ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களிடம் ஏமாறும் நிலை பெருமளவில் குறைந்துவிடும்.

இந்த மசோதாவின் முக்கிய அம்சமே, 500 ச.மீ பரப்பளவில் செயல்படுத்தப் படும் திட்டங்கள் அனைத்துமே ரியல் எஸ்டேட் கண்காணிப்பு அமைப்பிடம் இனி முறைப்படி பதிவு செய்யப்பட வேண்டும் என்பதே. 1000 ச.மீட்டர் என்று இருந்ததை  500 ச.மீட்டராகக் குறைத்ததன் மூலம் சாதாரண மக்களுக்கும் பாதுகாப்புக் கிடைத்திருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்