முதலீட்டுக்கு ஏற்ற 5 மிட் கேப் பங்குகள்!

நீண்ட காலத்தில் லார்ஜ் கேப் பங்குகளைவிட, மிட் கேப் பங்குகள் அதிக லாபத்தைத் தந்திருக்கின்றன. அந்த வகையில், அடுத்த 3 முதல் 6 மாதங்களில் அதிக லாபம் தரக்கூடிய மிட் கேப் பங்குகளை நாணயம் விகடன் வாசகர்களுக்குப் பரிந்துரைக் கும்படி மும்பையைச் சேர்ந்த பங்குச் சந்தை நிபுணரும் பங்குச் சந்தை ஆலோசனை மற்றும் பயிற்சி நிறுவனமான குரோத் அவென்யூஸ் (Growth Avenues) நிர்வாக இயக்குநருமான டாக்டர் சி.கே.நாராயணிடம் கேட்டோம். அவர் பரிந்துரை செய்த அந்த ஐந்து பங்குகளின் விவரம் இதோ.

கேம்லின் ஃபைன் சயின்சஸ்  (CAMLINFINE)

இந்தியாவில் இருந்து மருந்துகள், சிறப்பு வகை ரசாயனங்கள், உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் முன்னணி நிறுவனம், கேம்லின் ஃபைன் சயின்சஸ்.

கேம்லின் குழுமம், கடந்த 84 ஆண்டுகளாக இந்தியாவில் ஸ்டேஷனரி பொருட்கள் விற்பனையில் முன்னணியில் இருந்து வருகிறது. சுமார் இருபது ஆண்டுகளுக்குமுன் கேம்லின், பார்மா மற்றும் சிறப்பு வகை ரசாயனங்கள் என இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டது. இன்றைக்கு கேம்லின் ஃபைன் சயின்சஸ் நிறுவனம் ஆன்டியாக்ஸிடன்ட்ஸ் உற்பத்தி மற்றும் சந்தைப் படுத்துதலில் உலகின் இரண்டாவது பெரிய நிறுவனமாக உள்ளது.

இந்த நிறுவனம் வளர்ந்துவரும் சந்தைகளான ஆசியா, லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், இந்தியா மற்றும் சீனாவில் விரிவாக்கப் பணியில் இருக்கிறது.

நிறுவனப் பங்கின் விலை மாற்றத்தை டெக்னிக்கல்படி பார்க்கும் போது, கடந்த இரண்டு மற்றும் அதற்கு மேம்பட்ட ஆண்டு காலத்தில் மேம்பட ஆரம்பித்திருக்கிறது. குறிப்பாக, மூவிங் ஆவரேஜ் போக்கு, வால்யூம் நன்றாக இருப்பது பாசிட்டிவ் அம்சங்களாகும்.

அண்மையில், இந்த நிறுவனப் பங்குகளைப் பலர் மொத்தமாக வாங்கிய தால், பங்கின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. மேலும், இண்டி கேட்டர்களும் பங்கின் விலை மேலும் உயரும் எனச் சுட்டிக்காட்டுகின்றன. குறுகிய காலத்தில் பங்கின் விலை ரூ.165-170-க்கு அதிகரிக்கக் கூடும்.

இலக்கு விலை ரூ.170


ஹுதமாகி பிபிஎல் (PAPERPROD)

பின்லாந்தைச் சேர்ந்த ஹுதமாகி ஓயி நிறுவனம், உலக அளவில் டாப் 10 நுகர்வோர் பேக்கிங் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. ஹுதமாகி பல பிரிவுகளில் மார்க்கெட் லீடராக உள்ளது. உலக அளவில் இதன் டேர்னோவர் 210 கோடி யூரோ.

இப்போது பிளக்ஸிபிள் பேக்கிங், லேபிலிங் தொழில் நுட்பம், சிறப்பு வகை கார்டன்களில்(பேக்கிங் பெட்டிகள்) ஹுதமாகி நிறுவனம் முன்னணியில் இருக்கிறது. இந்த நிறுவனம் தானே, சில்வஸ்ஸா மற்றும் ஹைதராபாத்தில் ஒருங்கிணைந்த உற்பத்திப் பிரிவுகளைக் கொண்டுள்ளது.

ஹுதமாகி நிறுவனப் பங்கின் சார்ட்டினைப் பார்க்கும்போது, அதன் பங்கு மிகவும் வலிமையாக விலை ஏறி வருவதைப் பார்க்க முடிகிறது. டெக்னிக்கல்படி, இந்தப் பங்கானது ஒவ்வொரு ஏற்றத்துக்குப் பிறகும் சரியாமல் நிலை பெற்றிருப்பதைக் காண முடிகிறது. இதிலிருந்து நீண்ட கால முதலீட்டாளர் கள் இந்தப் பங்கு முதலீட்டிலிருந்து விலக ஆர்வம்காட்டாமல் இருப்பது தெளிவாகிறது. அதேநேரத்தில், ஒவ்வொரு ஏற்றத்துக்குப் பிறகான இறக்கமும் முதலீட்டுக்கான வாய்ப்பாக அமைகிறது.

இ-காமர்ஸ் துறை வளர்ந்துவரும் நிலையில், பேக்கிங்குக்கான தேவை யும் கூடவே அதிகரித்து வருகிறது. அந்த வகையில், பேக்கிங் துறையைச் சேர்ந்த ஹுதமாகியின் பங்குகளுக்குத் தேவை அதிகரித்து, அதன் பங்கின் விலையும் உயர்ந்து வருகிறது. தற்போதைய நிலையிலிருந்து பங்கின் விலை மேலே செல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது. நடுத்தரக் காலத்தில் பங்கின் விலை ரூ.530-க்கு உயரக் கூடும்.

இலக்கு விலை ரூ.530


தனேஜா ஏரோஸ்பேஸ் (TANEJAER)

புனேவைச் சேர்ந்த இந்தியன் சீம்லெஸ் குழுமத்தைச் சேர்ந்த இந்த நிறுவனம், கடந்த 1994-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. ராணுவம் சாராத விமானத்தை இந்தியாவில் தயாரித்த முதல் நிறுவனம் இது.

வணிகத்தை விரிவாக்கம் செய்ய இத்தாலியைச் சேர்ந்த பார்டேனவியா (Partenavia) உடன் கூட்டுக் கொண்டுள்ளது. இந்த நிறுவனம் அதன் வணிக ரிஸ்க்கைக் குறைக்க, டிரெய்னர் ஏர்கிராஃப்ட் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறது.

இந்தப் பங்கின் விலை சார்ட்டினைக் கவனித்தால், அதில் நல்ல ரவுண்டிங் பேட்டர்னைப் பார்க்க முடிகிறது. இந்த பேட்டர்ன் நீண்ட காலமாக இருப்பதைப் பார்க்கும்போது, இந்தப் பங்கில் நீண்ட நாட்களாகத் தொடர்ந்து முதலீடு நடந்து வருகிறது என்பதைக் கணிக்க முடிகிறது. இந்த பேட்டர்னில் பங்கின் விலை ரூ.75 என்கிற நிலையில் இருக்கும்போது, ஜூன் 15-ம் தேதி விலையில் பிரேக்-அவுட் நடந்தது. அதன்பிறகு பங்கில் அதிகமானவர்கள் புதிதாக முதலீடு செய்ய ஆரம்பித்ததை அடுத்து, பங்கின் விலை ஏற ஆரம்பித்திருக்கிறது. இந்த ஏற்றத்தின்போது வால்யூமும் அதிகரித்திருப்பது பாசிட்டிவ்வான விஷயம். இந்த இரு இண்டிகேட்டர்கள் சுட்டிக்காட்டுவதை வைத்துப் பார்க்கும்போது, பங்கின் விலை மேலும் அதிகரிக்கவே அதிக வாய்ப்பு உள்ளது. இந்த ஏற்றம் பல மாதங்களுக்கு நீடிக்கும் என்பதை பேட்டர்ன் சுட்டிக்காட்டுகிறது. பங்கின் விலை அடுத்த 3 முதல் 6 மாதங்களில் ரூ.165 - 175 வரை அதிகரிக்கக் கூடும்.

இலக்கு விலை ரூ.175


ஜிண்டால் ஸா  (JINDALSAW)

ரூ.1.15 லட்சம் கோடி மதிப்பைக் கொண்ட ஓ.பி. ஜிண்டால் குழுமம், இந்தியாவின் முன்னணி உருக்குப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமாகும்.  இதன் ஓர் அங்கமாக இருக்கும் ஜிண்டால் ஸா, சர்வதேச தொழில்நுட்பத்தில் இந்தியா வில் முதன்முதலாக சப்மெர்ஜிட் ஆர்க் வெல்டினைத் (Submerged Arc Welded) தயாரித்த நிறுவனம்.

குழாய் தயாரிப்பில் இது அசைக்க முடியாத மார்க்கெட் லீடராக இருக்கிறது. இந்த நிறுவனம் அதன் தொழிலை வேகமாக விரிவாக்கம் செய்து வருகிறது. ஒரு பொருள் மட்டுமே தயாரித்த இந்த நிறுவனம், பல பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனமாக மாறி இருக்கிறது. மேலும், பைப் கோட்டிங் உள்ளிட்ட பல மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களையும் தயாரித்து வருகிறது.

இந்த நிறுவனத்தின் ஜூன் காலாண்டு முடிவுகள் பங்கின் விலை கணிசமாக அதிகரிக்க உதவி இருக்கிறது. மேலும், பங்கு வர்த்தகம் அதிக வால்யூமுடன் நடந்திருப்பது கூடுதல் பலமாக உள்ளது. தற்போது மொமென்டம் இண்டிகேட்டர்கள் பங்கின் விலை படிப்படியாக அதிகரிக்கும் என்பதை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது. இதனால் ஜிண்டால் ஸா நிறுவனப் பங்குகளுக்கான தேவை அதிகரித்து பங்கின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடுத்தரக் காலத்தில் (6 மாதம்) பங்கின் விலை ரூ.120-க்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலக்கு விலை ரூ.120


என்ஐஐடி  (NIITLTD)

கடந்த 1981-ம் ஆண்டு முதல் இயங்கிவரும் இந்த நிறுவனம், ஸ்கில்ஸ் அண்ட் டேலன்ட் டெவலப்மென்ட் துறையில் சர்வதேச அளவில் முன்னணி நிறுவனமாக இருக்கிறது.

என்ஐஐடி நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் தனிநபர்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் எனப் பல பிரிவுகளில் பணியாளர்களுக்கு தொழில் பயிற்சியை அளித்து வருகிறது. நிறுவனங்கள் பயிற்சி பிரிவில் இதன் பிசினஸ் 15% வளர்ச்சி காணும் என என்ஐஐடி நிர்வாகம் கணித்திருக்கிறது.

இந்த நிறுவனப் பங்கின் மாதாந்திர சார்ட்படி, அருமையான ரவுண்டிங் பேட்டர்ன் உருவாகி இருக்கிறது. மேலும், வால்யூமும் அதிகரித்துள்ளது. இந்தப் பங்கின் விலை இதன் 2009-10-ம் ஆண்டின் பழைய உச்ச விலையை நோக்கி சென்றுகொண்டிருப்பதைக் காண முடிகிறது. இந்த நிறுவனத்தின் சமீபத்திய செயல்பாடு நன்றாக இருப்பதால், பல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், இந்த ஃபண்டில் முதலீடு செய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 6 மாதங்களில் பங்கின் விலை ரூ.100-120க்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலக்கு விலை ரூ.120

சி.சரவணன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick