அரசியல்வாதிகளே, ‘ஈகோ’வை மறந்து செயல்படுங்கள்!

டந்த மூன்று வாரங்களாக நடந்துவந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான எந்த மாற்றமும் கொண்டு வரப்படாமல் பெரும் குழப்பத்திலேயே முடிந்திருக்கிறது. இதனால் ஜிஎஸ்டி என்று சொல்லப்படுகிற குட்ஸ் அண்ட் சர்வீசஸ் டாக்ஸ் மற்றும் நிலம் கையகப்படுத்துதல் ஆகிய இரண்டு முக்கியமான மசோதாக்களையும் தாக்கல் செய்ய முடியாமல், அடுத்தக் கூட்டத் தொடருக்கு தள்ளிவிடப்பட்டு இருக்கிறது.

இன்றைக்கு வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படைத் தேவையாக இருப்பது ஜிஎஸ்டி டாக்ஸ் சட்டம். இந்த வரி விதிப்பு நடைமுறைக்கு வந்தால், தற்போது வழக்கத்தில் இருக்கும் பல்வேறு வரிகள் காலாவதியாகிவிடும். இதனால் நாடு முழுக்க ஒரேமாதிரியான வரி விதிப்பு முறை உருவாகி, பொருட்களின் விலை குறைந்து, அவற்றை அதிக அளவில் மக்கள் பயன்படுத்தும் நிலை ஏற்படும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்