கூகுளை ஆளும் தமிழன் சுந்தர் பிச்சை!

கூகுள் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக சென்னையைச் சேர்ந்த சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டு இருப்பதுதான் உலக அளவில் ஹாட் செய்தியாக பரவி, இந்த வாரத்தின் டெக் வைரலாகி இருக்கிறது. கூகுளின் ஆண்ட்ராய்டு பிரிவின் தலைவராகவும், கூகுளின் துணைத் தலைவராகவும் இருந்த சுந்தரை  தற்போது கூகுளுக்கு சிஇஓ ஆக்கி இருக்கிறார் கூகுளின் தலைவர் லாரி பேஜ்.

இந்தப் பதவிக்கு சுந்தர் பிச்சையை தேர்வுசெய்ய பல காரணங்கள் உள்ளன. சில மாதங்களுக்கு முன்பிலிருந்தே சுந்தர் பிச்சையை மைக்ரோசாஃப்ட் மற்றும் ட்விட்டர் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் பணியமர்த்தத் திட்டமிட்டு கொண்டிருந்தன. உலக அளவில் இயங்கும் பெரிய நிறுவனங்கள் அவரைக் கொத்திக்கொண்டு செல்வதற்குள் அவரை தனது நிறுவனத்தின் சிஇஓவாக ஆக்கியிருக்கிறார் லாரி பேஜ். சென்ற வருடமே 50 கோடி டாலர் போனஸுடன் சுந்தர் பிச்சையை தனது நிறுவனத்துக்குள் தக்க வைத்துக்கொண்டது கூகுள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்