கமாடிட்டி டிரேடிங் - அக்ரி கமாடிட்டி

ந்த வாரம் சோயாபீன் விலைப்போக்கு குறித்து சொல்கிறார் இன்டிட்ரேடு கமாடிட்டீஸ் அண்ட் டெரிவேட்டிவ்ஸ் நிறுவனத்தின் தென்மண்டல மேலாளர் முருகேஷ்குமார்.

சோயாபீன் (Soybean)

"கடந்த ஜூன் மாதத்திலிருந்து சோயாபீன் விலை 14% குறைந்து காணப்படுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம், உள்நாடு மற்றும் வெளிநாட்டுத் தேவை குறைந்து காணப்படுவதுதான்.

நடப்பு ஆண்டின் காரிஃப் பருவத்தில் சோயாபீன் விளையும் ஏரியா 3% அதிகரித்து, 11.2 மில்லியன் ஹெக்டேராக காணப்படுகிறது. அதேபோல, சமையல் எண்ணெய் வித்துக்கள் விளைச்சல் ஏரியாவும் 2% அதிகரித்து காணப்படுகிறது.சோயாபீன் அதிகம் விளையும் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மஹாராஷ்ட்ராவின் சில பகுதிகளில் நல்ல மழை பெய்திருப்பதால், சோயாபீன் உற்பத்தி அதிகரிக்கும் என்கிற எதிர்பார்ப்பினால்,  சோயாபீன் மற்றும் சோயா ஆயில் விலை வெகுவாகக் குறைந்து காணப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை குறைந்ததாலும் இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலர் அதிகரித்ததாலும் சோயாபீன் விலை பாதிப்படைந்துள்ளது.

வருகிற அக்டோபர் மாதம் புதிய அறுவடை ஆரம்பிக்க இருப்பதால், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சந்தைக்கு வரத்து அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு குவிண்டால் 3,100-3,230 ரூபாய் வரை வர்த்தகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 3,100 ரூபாய்க்கு குறைந்தால், 3,000 ரூபாய் வரை குறைய வாய்ப்பு இருக்கிறது. குறுகிய காலத்தில் 2,800 ரூபாய் வரை செல்ல வாய்ப்பிருக்கிறது.''

ஏலக்காய் (Cardamom)

கடந்த வாரத்தில் சந்தைக்கு ஏலக்காய் வரத்து வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. இதன் காரணமாகவே அதன் விலை குறைந்து வர்த்தகமானது. வரத்து அதிகரித்ததற்கு மிக முக்கிய காரணம், ஏலக்காய் விலையும் பகுதிகளில் அதிக உற்பத்தி காணப்பட்டதே. இருப்பினும் ஏலக்காய்க்காக ஏற்றுமதி தேவை அதிகரிக்கும் என்கிற எதிர்பார்ப்பினால் விலை மேலும் குறையாமல் தடுக்கப்படும்.

கடந்த வாரம் புதன்கிழமை அன்று மட்டும் 64 டன் ஏலக்காய் சந்தைக்கு வந்தது. ஒரு கிலோ ஏலக்காய் குறைந்தபட்ச சராசரி விலை 620 ரூபாய்க்கும், அதிகபட்ச சராசரி விலை 895 ரூபாய்க்கும் வர்த்தகம் ஆனது.

தற்போதைய நிலையில் வரத்து அதிகரித்து, தேவை குறைந்து காணப்படுவதால், வரும் வாரத்திலும் விலை குறைந்து வர்த்தகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜீரகம் (Jeera)

தேவை அதிகரித்து காணப்படுவதால், கடந்த வாரம் ஜீரகத்தின் விலை அதிகரித்து வர்த்தகமானது.

சந்தை நிலவரப்படி, வெளிநாட்டு வர்த்தகர்கள் இந்திய ஜீரகத்தை வாங்க அதிக ஆர்வம் காட்டி வருவது தெரிய வந்திருக்கிறது. ஏற்றுமதி தேவை அதிகமாக இருப்பதினால் ஜீரகத்தின் விலை அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது.

சீனாவில் ஜீரகம் பயிர் சுமார் 30% வரை சேதமாகி இருப்பதாலும், சிரியா மற்றும் துருக்கியில் அரசியல் பதற்றம் ஏற்பட்டிருப்பதாலும் இந்தியாவுக்கு ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகமாகக் கிடைத்து வருவது  வர்த்தகர்கள் கவனிக்க வேண்டிய விஷயமாகும்.

ஜீரகத்துக்கு கடந்த இரண்டு ஆண்டுகளைவிட தற்போது அதிக விலை கிடைத்து வருவதால், விவசாயிகள்  வெகுவாக மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். இதனால் வருகிற 2015 - 16 பருவத்தில் அதிகமான விளைச்சல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், ஜீரகம் அதிகம் விளையும் குஜராத் மாநிலத்தில் விளைச்சலுக்கு தேவையான மழை பெய்ததால், ராபி பருவத்தில் நல்ல விளைச்சல் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மஞ்சள் (Turmeric)

உள்நாடு மற்றும் வெளிநாட்டுத் தேவைகள் அதிகரித்துக் காணப்பட்டதால், கடந்த வாரத்தில் மஞ்சள் விலை அதிகரித்தே வர்த்தகமானது. தேவை அதிகரிப்பின் காரணமாக முக்கிய மஞ்சள் சந்தைகளில் மஞ்சளை வாங்க வர்த்தகர்கள் அதிக ஆர்வம் காட்டினார்கள்.

தவிர, நடப்புப் பருவத்தில் மஞ்சள் விதைப்பு குறைவாக இருப்பதாகவும் தெரிய வந்திருப்பது  விலை உயர காரணமாகி உள்ளது. தெலங்கானாவில் மஞ்சள் விதைப்பு 38,809 ஹெக்டேராக  உள்ளது.  இது கடந்த ஆண்டில் 42,916 ஹெக்டேராக இருந்தது.

தேவை அதிகரித்துக் காணப்படுவதால் இனிவரும் வாரங்களில் மஞ்சள் விலை அதிகரித்து வர்த்தகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செ.கார்த்திகேயன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick