சுற்றிச் சுழன்று படமெடுக்கும் லில்லி!

தனஞ்ஜெயன்

ரு திருமணம். இதில் கலந்துகொண்டவர்களின் ஒவ்வொரு  வரின் அசைவையும் மில்லி செகண்ட் அளவில் படம் பிடித்துக் காட்டுகிற மாதிரி ஒரு கேமரா சுற்றிச் சுற்றி வந்து படமெடுத்தால்  எப்படி இருக்கும் என்று ஹென்றி பிராட்லோ நினைத்தார். அதன் விளைவாக உருவானதே  லில்லி ரோட்டர்.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பெர்க்லே ரோபாட்டிக் லேப்பில் உருவான இந்த லில்லியில் கையில் தாங்கிக் கொள்ளக்கூடிய அளவில் 1.3 கிலோ கிராம் எடையுடன் கூடிய ஒரு ரோட்டர். அதில் பொருத்தப்பட்டுள்ள ஹை-டெபனிஷன் கேமிரா; இதை இயக்கும் கருவியை கையில் வாட்ச் போல மாட்டிக் கொள்ளலாம்.

முற்றிலும் வயர்லெஸ் சாதனமாக வலம் வரும் இந்த லில்லி, சாதாரண நிகழ்வைக்கூட படுபிரமாண்டமான நிகழ்வாக மாற்றிவிடும் வல்லமை கொண்டது. உங்கள் கையில் இருக்கும் இந்த லில்லி கேமிராவை எடுத்து காற்றில் தூக்கி வீசினால் போதும், கேமிராவைத் தாங்கி இருக்கும் ரோட்டரில் மறைந்திருக்கும் இறக்கைகள் தானாக  சுற்றத் தொடங்குவதன் மூலம் ரோட்டர்  பறக்கத் தொடங்கிவிடும். உடனே அதிலிருக்கும் கேமரா செயல்பட்டு,  காட்சிகளை பதிவு செய்யத் தொடங்கிவிடும். நீங்கள் எங்கு சென்றாலும் ஜிபிஎஸ் மூலம் உங்களைக் கண்டறிந்து, உங்களை நிழல் போல் தொடரும். இதுதான் லில்லியின் ஸ்பெஷல்.

லில்லியில் பொருத்தப்பட்டுள்ள ஆக்சிலரோ மீட்டர் நாம் நகரும் வெலாசிட்டியைக் கண்டறிந்து அதற்கு ஏற்றார் போல் அதன் வெலாசிட்டியையும் அட்ஜஸ்ட் செய்வதால், இதில்  எடுக்கப்படும் வீடியோக்கள் ‘ஷேக்’ ஆவதில்லை.  

லில்லியின் மூலம்  எடுக்கப்படும் பதிவுகள் ரோட்டரில் பதிவா கின்றன. அவற்றை அப்ளிகேஷன்களில் ஸ்ட்ரீம் செய்தும் பார்க்கலாம். நான்-ரீபிளேசபிள் பேட்டரி யுடன் வரும் லில்லி ஒரு வாட்டர் ரெஸிஸ்டன்ட். நீங்கள் இதை தண்ணீரில் போட்டாலும் பறந்து வெளியில் வந்துவிடும்.

லில்லியின் தொழில் நுட்ப விளக்கங்கள் இன்னும் விரிவாக வெளியாகவில்லை. அடுத்த சில ஆண்டு களில் சினிமாவிலும் நிஜ வாழ்க்கையிலும் இந்த லில்லி கேமிரா பட்டையைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கலாம்.

ந்த லில்லி வீடியோவை பார்க்க ஸ்கேன் செய்யவும்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick