கையசைவில் கருவிகளை இயக்கும் புராஜெக்ட் சோலி!

அ.நிவேதா

னி நீங்கள் ஃபேனை ஓடவிடுவதற்கு எழுந்து போய் ஸ்விட்சை ஆன் செய்ய வேண்டிய தில்லை. விரலை சொடுக்கினால் போதும்.  வேகத்தைக் கூட்ட, குறைக்க விரலை அசைத்தாலே போதும். செல்போன், கம்ப்யூட்டர், டிவி என எல்லா உபகரணங்களையும் கைவிரல்களைக்கொண்டே செய்து முடிக்கும் வழிகளைக் கண்டு பிடிப்பதுதான் புராஜெக்ட் சோலியின் (Project Soli) நோக்கம்.

ரேடார் தொழில் நுட்பத்தில் உள்ள ரேடியோ ட்ரான்ஸ்மீட்டர் கதிர்களை ஒரு பொருளின்மீது செலுத்தி, அதன் மேல்பட்டு பிரதிபலிக்கும் கதிர்களை ரேடியோ ரிசீவர்கள் வாங்கிக் கொள்ளும். இதே தொழில்நுட்பத்தை நம் கைகளின் மிகச் சிறிய அசைவுகளையும் ட்ராக் செய்து, அதற்கேற்ப எலெக்ட்ரானிக் கருவிகள் செயல்படுமாறு வடிவமைக்கின்றனர் புராஜெக்ட் சோலியின் கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள். ரேடார் வன்பொருளை ஒரு சைகை சென்சாராக மாற்றி அமைப்பதன் மூலம் மிகச்சிறிய அளவிலான அசைவுகளைக்கூட துல்லியமாக செய்து முடிக்க முடியும் என்கின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்