சந்திரபாபு நாயுடு - ஸ்மார்ட் சி.எம்!

ஜெ.சரவணன்

ந்திரப்பிரதேசம், தெலங்கானா மற்றும் ஆந்திர மாநிலமாக உடைந்து ஒரு வருட காலத்துக்கும் மேலாகிவிட்டது. அதுவரை ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரமாகவும் பொருளாதார மையமாகவும் இருந்த ஹைதராபாத், தெலங்கானாவின் தலைநகரமாக மாறிவிட, அடுத்த பத்து ஆண்டுக்குள் ஆந்திர மாநிலம் தனக்கென ஒரு புதிய தலைநகரை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அதுவரை ஹைதராபாத் இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகரமாக இருக்குமென்று ஆந்திரப் பிரதேசம் மறுகட்டமைப்பு சட்டம் 2014-ன்படி முடிவு செய்யப்பட்டது.

ஆனால், ஹைதராபாத் நகரத்தைப் பகிர்ந்துகொள்வதில் இரு மாநிலங்களுக்கும் இடையே அரசியல் சலனங்களும் குழப்பங்களும் ஏற்பட்டுக்கொண்டே இருந்தன. இந்தப்  பிரச்னைக்கு ஒரே நிரந்தரத் தீர்வு ஆந்திர மாநிலத்துக்கென ஒரு புதிய தலைநகரை கூடிய விரைவில் கட்டி முடிப்பதுதான் என்று முடிவெடுத்தார் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு. இதற்காக கடந்த ஒரு வருடமாக ஒவ்வொரு நொடியும் ஆந்திராவின் புதிய தலைநகரை உருவாக்குவதில் முனைப்பாக இருக்கிறார் சந்திரபாபு. அதன் விளைவாக உருவெடுத்து வருவதுதான் அமராவதி என்னும் மக்களின் தலைநகரம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்