கன மழை... கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய 6 விஷயங்கள்!

ச. ஸ்ரீராம்

1. மழையால் ஏடிஎம் மையங்கள் கூட்டமாகவும், சில சமயங்களில் வங்கிகளால் சேவை செய்ய முடியாமலும் இருக்கும். முன்னெச்சரிக்கையாக குறிப்பிட்ட அளவு தொகையை பணமாக மாற்றி கையில் வைத்துக்கொள்ளுங்கள். டெபிட் கார்டு இருக்கிறதே என்ற அலட்சியமும் வேண்டாம். மழையால் நெட்வொர்க் இயங்காமல் போனால் அதன் மூலம் பொருட்களை வாங்குவதிலும் சிரமம் ஏற்படலாம்.

2. மழையால் அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்து விற்கும் சூழ்நிலை நிலவுகிறது. சில இடங்களில் பணம் கொடுக்கத் தயார் என்றாலும் பொருட்கள் கிடைப்பதில்லை. அதனால் அருகில் உள்ள இடங்களில் சில நாட்கள் வைத்து   பயன்படுத்துகிற  மாதிரி   உணவுப் பொருட்களை வாங்கி  வீட்டில்   சேமித்து  வைத்து கொள்ளுங்கள். மழை நீரினால் வீடு சூழப்பட்டாலும் அந்த உணவுப் பொருட்கள் உங்களுக்கு போதுமானதாக இருக்கும். தண்ணீர் மற்றும் பாலுக்கான மாற்றுப் பொருள் ஆகியவற்றை போதிய அளவு வாங்கி  வைத்துக்கொள்வது.

3. கன மழை காரணமாக  பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் போட முடியாத நிலை    ஏற்பட்டிருக்கிறது. இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தி அலுவலகத்துக்கு சென்று வருகிறவர்கள், தங்கள் வண்டியில் அதிகபட்சமாக எவ்வளவு பெட்ரோலை நிரப்பிக்கொள்ள முடியுமோ அந்த அளவுக்கு நிரப்பிக்கொள்வது அவசியம்.

4. போக்குவரத்து நிலவரங்களை அறிந்து உங்கள் இருப்பிடங்களில் இருந்து புறப்பட்டு செல்லுங்கள். பாதி வழியில் மாட்டிக்கொண்டால் நீங்கள் வீடு திரும்புவது கடினமாகிவிடும். ரயில்கள் மற்றும் விமானங்கள் வழக்கம்போல இயங்குகிறதா அல்லது ரத்து செய்யப்பட்டிருக்கிறதா என்பதை எல்லாம் சரியாக பார்த்து பின் பயணத்தை துவங்குவது நல்லது.

5. சரியான ஹெல்ப் லைன் எண்களை மட்டும் பகிருங்கள். வதந்திகளை பரப்பி உண்மையாலுமே உதவுபவரையும் தவறாக நினைக்க வைத்துவிடாதீர்கள். சமூக இணையதளங்களில் உங்களுக்கு வரும் தகவலை உறுதி செய்தபின்னர் பகிருங்கள். அதுமட்டுமின்றி தவறான கணிப்புகள் வதந்திகள் ஆகியவற்றை தேவையில்லாமல் பரப்பாதீர்கள்.

6. உங்கள் செல்போன்களில் போதிய அளவு பேட்டரி திறனை வைத்துக் கொள்ளுங்கள். தேவையில்லாமல் பயந்து பலருக்கு போன் செய்து பேட்டரியை தீர்த்துவிடாதீர்கள். யாராவது ஒருவரை தொடர்புகொள்ள பேட்டரி அவசியம். மின்சாரம் இல்லாமல் தவிப்பதால், பேட்டரியை தீர்க்காமல் கூடியமட்டும்் தொடர்பில் இருக்க முயற்சி செய்யுங்கள். லேப்டாப் போன்ற உபகரணங்களில் இருந்து செல்போனுக்கு சார்ஜ் ஏற்ற முடியும். அலுவலகம், ரயில் நிலையம் போன்ற இடங்களில் உங்கள் செல்போன், கணினிகளை சார்ஜ் செய்ய முடியுமோ, அங்கு சென்று பேட்டரி திறனை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick